எரிமலை இதழ் மே 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இக்கவிதையை தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில் மீள் வெளியீடு செய்கின்றோம்.!
வெட்டவெளி மீதினிலே
கொட்டும் பனி நடுவினிலே
வாட்டும் ஒளி தனிலே
நட்ட நடுராவினிலே
காவல் இன்றும் தொடர்கிறது
சத்தியமே வெல்லுமென்று
நிச்சயம் நம்புகின்ற
வேங்கையணி பாய்கிறது
காவல் இன்னும் தொடர்கிறது

நெஞ்சுதனில் நஞ்சு முட்ட
நெற்றி வியர்வை நிலத்தில் சொட்ட
பஞ்சனையில் துஞ்சும் வேளை
சென்றிதனிைல் நிற்கும் வேங்கை.

நவம் அறிவுக்கூடப் போராளி
வெளியீடு :எரிமலை இதழ்
மீள் வெளியீடு :வேர்கள் இணையம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”