
அசைவற்று நின்றிருக்காது
இயங்கிக் கொண்டேயிருந்தது
அதனுள் உயிர் வாழ்வனவும்
உயிரற்றவும் கூட
ஏதோ ஒரு வகையில்
அசைவுற்றுக் கொண்டேயிருந்தன
ஆனாலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட
பின்வாங்குதல் ஒரு முடிந்த முடிவென்று
புலி பதுங்குவது பயத்தினாலன்று
ஆயினும் உண்மை அதுவாயிருக்கவில்லை
தர்க்கவியல் முடிவுகளையெல்லாம்
தகர்த்தெறிந்தபடி
பின்வாங்குதல் செயல் மாற்றம் பெற்றது
அலைகள் ஓய்வற்ற முன்னேற்றமாய்
ஓங்கியடித்த அலைகளின் வீச்சில்
அவற்றினது இலக்குகள்
அள்ளுண்டும் தள்ளுண்டும் போயினை
பின்வாங்குதலையும் ஓர் போர்வழிமுறையாய்
உள்வாங்கத் தயாரற்றிருந்த கருத்துலகம்
இப்போது ஓயாது பேசிக்கொண்டிருக்கின்றது
அலைகளைப் பற்றி அலையலையாய்.
இது எப்படிச் சாத்தியமானது
என்றெழுந்த வியப்புக் குறிகளின் வரிசை
முடிவற்றுத் தொடர்கிறது
சில ஆண்டுகளுக்கு முன்னர் முழுதுமாய்
முற்றுப் பெற்ற (?) எங்கள் கதையின்
அத்தியாயங்கள் மீண்டும் தொடர்வது பற்றி
அபிப்பிராயங்கள் அநேகம் எழுகின்றன
இது எவ்வாறு நிகழ்வுற்றது என்ற தேடலில்
ஆழ்ந்து போயிருப்பவர்களை
இதை விடவும் அடியாழத்திற் சேர்க்க
இன்னும் வரவிருக்கின்ற அலைகள்
.கவியாக்கம் :-சூரிய நிலா
வெளியீடு :எரிமலை இதழ்
மீள்வெளியீடு :வேர்கள்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”