இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தாயக கவிதைகள் கானம்பாடி

கானம்பாடி

மேஜர்  சிட்டுவின் முன்றாம் ஆண்டு நீங்காத நினைவில் எரிமலை இதழில் வெளிவந்த கட்டுரை இன்று 21 ஆண்டு  நீங்காத நினைவில் வேர்கள் இணையத்தில் மீள்  வெளியீடு செய்கின்றோம் .!
சிட்டு எனும் மொட்டு
ஜெயசிக்குறுாய்ப் படை
அழிக்கச் செந்தணலில்
வேகியதாம்- சிட்டு
பொங்கி வந்த கண்ணீருள் – நீ
தந்த கையெழுத்துகள்
மீண்டும் மீண்டும்
வந்து வந்து இமைகளுள்
முட்டியது இமைகள்
முட்டிஈரலித்த விழிகள்
ஒளிநாடாக்களைப்
புரட்டிப் புரட்டிஉன்
பூமுகத்தைத் தேடியது
உண்மையென உனது மரணம்
உறுதிசெய்த வானொலிகள்
பொய்யான செய்தியென்று
பின்னாளில் சொல்லாதா..?
காத்திருந்து செய்திகள்

 

நிஜம் நிஜம் என்று தினம்
நிமிர்ந்து சொன்போது
நெருப்பில் வீழ்ந்த
உணர்வு நெஞ்சில் இடித்தது.
செருக்களத்தில்
சிங்களத்துச்சேனைகளின்
ஜெயசிக்குறுய்ப் படைநகர்வை
நேரெதிர்த்துச்சிட்டு-நீ
நெருப்பாய் எழுந்தாயோ..?
நண்பனே நீண்டதுயில்
கொண்டாயோ…?
என்னை மாயம் உன் குரலில்
ஒளிந்திருக்கோ . தெரியவில்லை
மறுபடி மறுபடி
மனசை அள்ளும் குரல் உனது
எப்படிமெளனித்துப் போனது – சிட்டு
எப்படிமெளனித்துப் போனது…..?
உடன்பாடல் ஒவ்வொன்றும்
உயிரை உருக்குமய்யா
ஏனின்று ஒன்றுமே பேசாமல்
ஒளிப்படமாய்ச்சிரிக்கின்றாய்.?
ஓ. தாயக விடுதலையின்
தார்ப்பரியம் விளக்கவோ
தொங்குகிறாய் நிழற்படமாய்- நீ
துாங்குகிறாய் கல்லறையில்..?
நான் கவி எழுத
நம்பிக்கை தந்த கானம்பாடி
உனக்கு அஞ்சலிக் கவிதை எழுதவா
ஆத்மார்த்தமாய்
வாழ்த்துத் தந்தாய்…!
இல்லை…இல்லை….
அடுப்படிக் கரும்புகை வாசமறுத்து
அகிலத்தைப் பார்க்க வைத்த
ஆசானல்லவா நீ..!
எப்படி மறந்து போகும் -சிட்டு
உன்னைப்படி
மறக்க முடியும்
மூன்றாண்டு ஓடியதாம
சிட்டு நீ

 

மீளாத்துயில் கொண்டு
நுாறாண்டு ஓடட்டும்-நீ
தினம் என் நினைவுகளில்
நிறைந்திருப்பாய்
நீங்காமல் நெஞ்சிருப்பாய்
நீசுமந்த கனவுகளை
நெஞ்சிருத்திப் புலிகளனி
நிரைநிரையாய்ப் போகிறது.
நீளாது துாரமினி
விடியல் நாளையென்று
நின்று களமாடுகிறார்- சிட்டு
நிம்மதியாய் துாங்கு நீ
தமிழீழம் மலருமன்று
வான்வெளியில் வந்துரைப்பேன்
தரணிக்குன் குரலால்
தமிழீழம் மலர்ந்ததென்று
பரணி நீபாட
பாவோடு காத்திருப்பேன்-சிட்டு
உன் பாராட்டுக் கையெழுத்து-என்
படைப்பைப் புனிதப்படுத்தும்
கவியாக்கம் :புதிய நிலா (யேர்மனி )
வெளியீடு :எரிமலை இதழ்
மீள் வெளியீடு :வேர்கள் இணையம்
 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments