
தென்றல் கூட புயலாகும்
என்பதை உன்னால்
தெரிந்து கொண்டேன்
பூ கூட பூகம்பமாகும
என்பதை உன்னால்
புரிந்து கொண்டேன்
ஒடை கூட கடலாகும
என்பதை உன்னால்
கண்டு கொண்டேன்
பூனை கூட புலியாகும்
பார்த்துக் கொண்டேன்
ஆனால் காணவில்லை
பெண்புலியே நீ
இறக்கும் வரை உறங்கியதை
இருக்கும் வரை இறந்ததை
ஆக்கம் :கலை அமுதா
வெளியீடு :எரிமலை
மீள் வெளியீடு :வேர்கள் இணையம்
முதல் இணைய தட்டச்சு உரிமை வேர்கள் இணையம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”