இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள்.!

கரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள்.!

கரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும்.

கிளிநொச்சி – ஆனையிறவுப் பகுதியில் 14.10.1998 அன்று ஆனையிறவு படைத்தள வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் நிலவன் ஆகிய கரும்புலி மாவீரரின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

இரும்புக்கோட்டை எவரும் நெருங்க முடியாத வைராக்கியம் என்று இறுமாப்பு கதைகள் பேசிக்கொண்டிருந்த மிக்கப்பெரும் படைத்தளம் தான் ஆனையிறவுப் படைத்தளம்.

ஆட்லறிகளின் பலத்தை அடுக்கி வைத்துக்கொண்டு அரக்கத்தனம் புரிந்து கொண்டிருந்தது இந்த படைத்தளம் எவரும் வந்து எதுவும் செய்ய முடியாது என்ற திமிர் ஆனையிறவு படைத்தளத்திற்குள் பரவியிருந்தன.

தமிழ்மக்களின் குடியிருப்புக்கள் மீது எறிகணைகளை ஏவி கோரத்தனம் ஆடியது ஆனையிறவு படைத்தளம்.

இதைத் தாக்கியளித்து இதற்கான தாக்குதல் திட்டத்தை நடைமுறைப் படுத்த அந்த தளத்தில் இருந்த கட்டளை மையங்களையும், ஆட்லறித் தளங்களையும் பற்றிய தகவல் பெறுவதற்கு கரும்புலி மேஜர் நிலவன் தலைமையில் வேவு நடவடிக்கையில் அணி களம் இறக்கப்பட்டு செயலாற்றிக்கொண்டிருந்தார்கள்.

நீண்ட நாட்களாக சேகரித்து தகவலிலிருந்து முழுமையான திட்டங்களையும் தீட்டும் வண்ணம் அமையப்பெற்றது.

இறுதியாக அந்த ஆனையிறவு படைத்தளம் மீட்பதற்கான திட்டங்களை தீட்டுவதற்காக இறுதியான வேவு நடவடிக்கைக்கு செல்லும் போது அந்த படைத்தளத்தில் எதிரியுடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் கரும்புலி மேஜர் நிலவன் 14.10.1998 அன்று அந்த மண்ணில் தேசப்புயலாய் வீசி சென்றான்.

 

விடுதலை  தாகத்துடன் புயலாக வீசிய தேசத்தின் புயல்

கரும்புலி மேஜர் நிலவன் அவர்கள்  நீளும் நினைவுகள்………!

இலக்குகைத் துகளாக்கி உயிரேந்தி மீண்ட தேசத்தின் புயல்கள்….!

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments