இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home கரும்புலி கரும்புலிகள் கரும்புலி மாவீரரெல்லாம் சரித்திரவான்கள் .!

கரும்புலி மாவீரரெல்லாம் சரித்திரவான்கள் .!

அகோர வெய்யில் பொழிகிறது. பட்டிக்குள் நுழைந்த சிங்கங்கள். கூச்சல், கதறல், அழுகை எதுவுமே அங்கே பலிக்கவில்லை .தாய்க்  கோழிகள் குஞ்சுகளை பாதுகாக்க அலறியடித்தன.  கூட்டித்திரிந்த குஞ்சுகளைப் பருந்துகள் தூக்கிச் செல்ல அந்தரித்த தாய்ப் பறவைகள். கால்களைக் கட்டி கண்களைக் கட்டி ஏற்றும் இறைச்சிக்காக ஆடு மாடுகளைப் போல இளைஞர்கள் ஏற்றப்பட்டார்கள். இது அன்று 1987- ல் வடமராட்சியின் நிலையாக இருந்தது.
பிடிக்கப்பட்ட அனைவருமே புலிகள் என்று முத்திரையும்குத்தப்பட்டார்கள். இவர்கள் அனைவருமே சிங்கள தேசத்தின் பூசா, மகசீன், வெலிக்கடை போன்ற சித்திரவதைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். அனுப்பிவிட்டு பாட்டும் கூத்துமாய் பொழுதுகள் கழிந்தனை புலிகள் எல்லாத்தையும் பிடிச்சுப் போட்டோம்” என்று சிரித்துச்சிரித்து தம் உருக்களுக்கு போதை ஏற்றினர்
அவன் தயாராகிக் கொண்டிருந்தான். ஜூலை 5-ம் திகதி இரவு பாட்டும் கூத்துமாய் கழித்த அந்த பருந்துகளின் கூட்டுக்குள் பாய்வதற்கு அவன் தயாராகிக் கொண்டிருந்தான். அவனுக்குள் அக்கினிப் பந்தொன்று ஆவேசமாய் உருண்டு கொண்டிருந்தது. சத்திய வேள்வி ஒன்றிற்காக அவன் சாகத் துணிந்து நின்றான். அவனைச் சுற்றிலும் தோழர்கள் துரிதமாக இயங்கிக் கொண்ருந்தார்கள்
அவன் தாய் மீது பற்றறுக்கொண்டவன், அவன் தாய் நாட்டின் மீது பற்றுக்கொண்டவன், அவன் தலைவன் மீது பற்றுக் கொண்டவன். இந்தத் தேசத்தின் மக்களுக்காக பெரும்தியாகம் செய்திட துணிந்தான் தன்னை அழிப்பதன் மூலம், தன்இனத்தவர்களை அழிப்பவர்களை அழித்தொழிக்கும் வல்லமை கொண் டான். தலைவன் கொடுத்த ஆசி அவனுக்கு மேலும் ஓர் புதியதோர் உற்சாகத்தையும்  வழங்கியிருந்தது எங்கும் இருள் அப்பிக் கிடந்தது பாய்ச்சலுக்கான நேரமும் நெருங்கியது. ஒன்றாய்ப் பழகிய தோழர்கள் , சிரித்து சிரித்து சந்தோஷமாய்ப் பழகியவர்கள் எல்லோரையும் அவன்பார்த்தான். தன் இனத்திற்கு தன்னால் செய்யக்கூடிய அதியுயர் தியாகத்தை செய்யப்போகிறேன் என்கின்ற பெருமிதத்தை அவன் முகம் வெளிப்படுத்தியது. எல்லோரையும் பார்த்தான். “மச்சான் போய்ற்றுவாறன்”. அவனைச் சுமந்த வாகனம் புறப்பட்டது. புறப்படும் வாகனத்தில் அமர்ந்திருக்கும் அவனைப் பார்த்து இருளிலும் மற்றவர்கள் கையசைத்தார்கள். சிறிது நேரத்தில் சுற்றுப்புற மெல்லாம் கிடுகிடுத்தது. வானத்தை நோக்கி கரும்புகை எழுந்தது. கூடி மகிழ்ந்த குஞ்சுகளையெல்லாம் கூட்டி அள்ளி கொடுஞ் சிறைக்குள் அடைத்தவர்களின் கொட்டம் அடங்கியது அவனின் உயிர்ப் பறவை உயர எழுந்து பறந்தது. அந்த உயிர்ப் பறவையின் இனிய சுதந்திர தாகம் மெல்ல மெல்ல தென்றலுடன் கலந்தது. மில்லர் மிகப் பெரிய தியாகம் செய்த நாள் ஜூலை 5 தமிழீழத்தின் புதியதோர் நாளாய், தமிழீழத்தின் புதிய சகாப்தம் படைத்த திருநாளாய்  திகழ்கின்றது
இரண்டாம் உலகப் போர் உக்கிரம்  அடைந்திருந்த காலம் பிரித்தானிய கடற்படைக் கப்பல் புரிந்தஅனர்த்தங்கள் ஏராளம்.இந்த வேளையில்தான் ஜப்பானிய தற்கொலை வீரன் ஒருவன் விமானத்தில் பறந்து வந்து அந்தக் கப்பலினுள் வீழ்ந்து வெடித்து தன் தாய்நாட்டின் மீதான பற்றை வெளிக்காட்டினான். அவனது அந்தத் தியாகம் உலகில் வியந்து பேசப்பட்ட வரலாறாயிற்று. அந்தத் தாக்குதல் யுக்தியை 1987 ஜூலை 5-ல் தமிழீழம் மீண்டும் பேசிக் கொண்டது
பலவீனமான  எமது இத்தின் மிகப் பலம் வாய்ந்த ஆயுதமாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன் கரும்புலிகள் எமது இனத்தின்  தற்காப்பு  கவசங்கள். போராட்டப்பாதையின் தடை நீக்கிகள் என்று  கரும்புலிகள் தியாகத்தையும்  உருவாக்கத்தையும் முன்மொழிந்தார் எமது தேசியத் தலைவர் அவர்கள்
கரும்புலிகள் மென்மையானவர் எமது இனத்திற்கு பெருமை சேர்த்தவர்கள். எமது தேசத்திற்கும் பெருமை சேர்த்தவர்கள். பெற்றவர்களுக்கும்  , கூடப்பிறந்தவர்களுக்கும் பெருமை சேர்த்தவர்கள். எனவேதான், “என்ர மகன் செத்தது எனபது எனககு கவலைதான் ஆனா, அவன் நாட்டுக்காகத் தானே செத்தவன். அதை நினைக்க பெரு மையாத்தான் கிடக்கு” கண்கள் கலங்க கரும்புலி ஒருவனின் தாய் கூறினாள்
கரும்புலிகளின் உன்னதமான தியாகங்களினால் எமது போராட்டம் எத்தனையோ திருப்பு முனைகளையும் எவ்வளவோ வளர்ச்சியினையும் கண்டுள்ளது. எதிரி இருந்த  இடம் எல்லாம் அவர்கள் ஏறி நடந்தார்கள்.  குறைந்த பலத்தோடு நின்று எதிரிக்கு கூடிய அழிவை ஏற்படுத்துகின்றார்கள். தன்னை அழித்து பகைவர்களைஅழிப்பதில் அவர்கள் பெருமை கொள்கின்றார்கள். தமக்கு கிடைக்கும் அந்த சந்தர்ப்பத்தை பெறும் பேறாகக் கருதுகிறார்கள். அதனால்தான் “இப்படி நிறைவான சாவு எல்லோருக்கும்   வராது  என்று கரும்புலி மேஜர் டாம்போ தன் தோழன் ஒரு வனிடம் சொல்லிப் பெருமிதம் கொண்டான்
கரும்புலிகளின் ஈடுஇணையற்ற தியாகத்தினால் தமிழீழம் தலை நிமிர்ந்து நிற்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியிலும் கரும்புலிகளின் ஈகம் கலந்திருக்கின்றது.இரும்பு மனிதர்களாக கரும்புலிகள் இருந்தபோதும் அவர்கள் மனங்களில் மென்மை குடிகொண்டுள்ளது. அவர்களின் மென்மையான மனங்களில் உறுதி இருந்தது. தாயகத்து மண்னிற்காக, தாயகத்து மக்களுக்காக செய்யும் உன்னதமான தியாகங்களில் அவர்கள் உறுதியோடு இருந்தார்கள்  அந்த உறுதியின் வெளிப் பாடாகத் தான் மாங்குளம் முகாமைத் தகர்த்து வெற்றிக்கு வழி சமைத்த  கரும்புலி லெப்.கேணல் போர்க் தன் தோழனிடம் “நான் புறப்படப்போறன்  . இதோட மாங்குளம் முகாம்   முடிஞ்சுது” என்று திடமாகச் சொன்னான் 
 மனிதர்கள் மரணத்தைக் கண்டு நடுநடுங்கும்போது கரும்புலிகள் மரனத்தை மடியில் கொண் டு திரிகிறார்கள். அவர்களின் மரணம் ஆயிரம் ஆயிரம் காவியங்களானது. கண்ணீ ருக்கு அப்பாற்பட்ட சோகங்களை விரும்பாத வீரமாயிற்று. உறுதி, எதற்க்குமே அஞ்சாத உறுதி எவருக்கும்  அஞ்சாத உறுதி அதுதான் கரும்புலிகளின் பலம். நெல்லியடியில் இடியாய்  முழங்கி மில்லர் தொடக்கிவைத்த தியாகம் இன்னும் ஓயவில்லை
கரிய இருளைப் பூசிக்கொண்டு நீண்டு படுத்திருக்கும் அலைகடலிலும கடற் கரும்புலிகள் உலா வந்தார்கள். எங்கள் வாழ்வின் இனிமைகளைக குலைதத எலலா இடங்களிலும்  கரும்புலிகள் பாய்ந்தார்கள் எல்லைகள் தாண்டியும் கரும்புலிகள் தமது பலத்தின் இருப்பை உணர்த்தினார்கள். வல்வைக் கடலில்,பருத்தித்துறைக் கடலில், வெற்றிலைக்கேணியில், சிலாவத்துறையில், முல்லைக்கடலில், காங்கேசன்துறையில் காரைநகரில், திருகோணமலையில் என தமிழீழத்தின் எல்லாக் கடற்ப்பரப்பிலும் ஏன் கொழும்பிலும் கூட எதிரியின் கடற் கலங்கள் சிதறின வான்முட்ட எழுந்த புகை மண்டலத்துடன் கரும்புலிகளின் உடலும்உயிரும் கலந்தன. போராளிகளினதும் தமிழ் மக்களினதும் உயிர்களைக்கொள்ளையடித்து  உடமைகளை நாசமாக்கிய கடற்பேய்களை அவர்கள் அழித்தார்கள். தம் இனத்தை அழித்தவர்களை அழித்தார்கள். தம்மை அழிப்பதன்மூலம் தமிழீழ சந்ததியினருக்கு பெரும் தியாகம் செய்தார்கள் . தங்களது இனிமையான வாழ்வை மட்டுமன்றி தம் இனிய உயிர்களையும் தியாகம் செய்தார்கள் சாகுமபொழுதினில் இரு சாவிக் குண்டலம்  தந்தவரெவர் கொடைககை என்று கர்ணனின் கொடைச் சிறப்பை வியந்து போற்றினான் பாரதி. ஆனால் அக் கொடைக்கும் மேலாய் தம்மையே தற்கொடை தந்தவர்கள்  எங்கள் கரும்புலிகள். தமிழீழத் தேசியத்தலைவரின் எண்ணத்தில் உருவாகி எண்ணற்ற வரலாற்றைப் படைத்தவர்கள் இவர்கள்  நன்றி வேர்கள் இணையம்
இவர்களதுவல்லமை ஆண்,பெண் வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டது. பகைதனை ஒழிக்கும் பெரும் புயல்களாய் தமிழீழப் பெண் போராளிகள் கரும்புலியானார்கள். தம்மை வெடியாக்கி பகையை அழிக்க தீரமுடன் நிமிர்ந்தனர் .
அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வரிசையாக வந்த பகைவனின் கடற்கலங்கள். அவள் உறங்கிக் கிடக்கும் எரிமலை என்பதனை அங்கயற்கண்ணனி உலகிற்கு உணர்த்தினாள். கரும்புலிகள் பலர் எழுத முடியாத காவியங்களாக தமிழீழ நெஞ்சங்களில் உறங்கிக் கிடக்கின்றார்கள்.
உயிர்த் தியாகம் என்பதுஉண்ணறமானது என்ற போதும் முகம்காட்டாத முகவரி சொல்லாத இவர்களின் உயிர்த்தியாகம் உன்னதத்திலும் உன்னதமானது. தன்னை இனங்காட்டாது தன் செயல் மட்டும் உலகறியச் செய்து தமிழீழத்தின் தன்மானத்தை உயரச் செய்தவர்கள் இவர்கள் . இவர்களின் உறுதி, பற்று. பாசம் எல்லாமே உயர்ந்தவை . இவர்கள் ஓயாத எரிமலைகள். புகைச்சல் இல்லாத புயல்கள்
தாக்குதல்தளத்திற்கு  தம்மை இசைவாக்கிக் கொண்டபோதும் தம் உள்ளங்களில் தாய் மண்ணின் விடுதலைத் தாகத்தையே சுமந்து நின்றார்கள். இவர்கள் அற்புத மனிதர்கள் எதிரிகளின் இலக்குகளைத் தேடி
அவற்றை அழித்தொழிப்பதற்காக இவர்கள் ஓடிய ஓட்டமும் எடுத்த முயற்சிகளும் இவர் நெஞ்சிலே சுமந்து திரிந்த தாயக தாகத்தை வெளிப்படுத்தின. இவர்களின் தியாக உணர்வவும் அர்ப்ப ணிப்புத் திறனும் அளவிட முடியாத விசித்திரங்கள்
அரிய பல செயல்கள் செய்த  கரும்புலிகளை எங்களது நெஞ்சுகளில் ஒட்டி நிற்கும் நிழல்களே, நெருப்புத் துகள்களே, தொடுவானம் போல ஜாலங்கள் வாழ்வு சுமந்தவரே, சுதந்திர வேட்கையுடன் சுற்றித்திரிந்த சுதந்திரப் பறவைகளே, வெடியதிரும் வேளையிலும் செடியில் மலராய் நின்றவரே, பகையழிக்க மனம் விரும்பி உமையழித்த  வீரரே எப்படி உங்கள் தியாகத்தைக் கூறுவோம், போற்றுவோம் எனத் தெரியவில்லை .
வெளியீடு :எரிமலை இதழ் 
மீள் வெளியீடு :வேர்கள் இணையம்
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments