கரும்புலி கப்டன் சிறைவாசன், கரும்புலி கப்டன் அகத்தி, கரும்புலி கப்டன் ஈழவன், கரும்புலி கப்டன் தினகரன், கரும்புலி லெப். வேணுதாஸ், கரும்புலி லெப். நளினன், கரும்புலி லெப். கலைச்செல்வன், கரும்புலி லெப். தொண்டன், கரும்புலி லெப். தங்கத்துரை, கரும்புலி லெப். சசிக்குமாரன், கரும்புலி 2ம் லெப். இசைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் அளவெட்டி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா இரவுவத்தின் நிலைகளிற்குள் 29.10.1995 அன்று ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி கப்டன் சிறைவாசன் / திலீப், கரும்புலி கப்டன் அகத்தி, கரும்புலி கப்டன் ஈழவன், கரும்புலி கப்டன் தினகரன் / ஜீவன், கரும்புலி லெப். வேணுதாஸ், கரும்புலி லெப். கோவிந்தன் / நளினன், கரும்புலி லெப். கலைச்செல்வன், கரும்புலி லெப். தொண்டன், கரும்புலி லெப். தங்கத்துரை / ராகுலன், கரும்புலி லெப். சசிக்குமாரன், கரும்புலி 2ம் லெப். இசைச்செல்வன் ஆகிய கரும்புலி மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலைக்கு வித்திட்டு தாயாக மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!
நீளும் நினைவுகளாகி.!
அளவெட்டி மண்ணில் தடம்பதித்த தேசத்தின் புயல்கள்.!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”