இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி வீரவணக நாள்.!

கரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி வீரவணக நாள்.!

கரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி வீரவணக நாள் இன்றாகும்.

யாழ். மாவட்டம்  பளைப் பகுதியில் ஓயாத அலைகள் 03  படை நடவடிக்கையின் போது 26.03.2000 அன்று  சிறிலங்காப் படைகளின் ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி அழித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் தனுசன், கரும்புலி  மேஜர் சுதாஜினி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.

பளையில் 26.03.2000 நள்ளிரவு ஆட்டிலறித் தளப்பகுதி பெரும் வெடிச்சத்தங்களினால் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆட்டிலறிகளும் எறிகணைகளும் வெடித்துச் சிதறி எரிவது அந்த ஆட்லறித்தளம் நிர்மூலமாகி விட்ட சேதியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தது. வான் வெளியில் பரவிக் கொண்டிருந்த தீச்சுவாலைகளின் பிரகாசம் கரும்புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் வானத்தில் பிரதிபலிக்கும்படி செய்து கொண்டிருந்தன. அந்த வீரமிகு சாதனையை நிகழ்த்தி விட்டு காவியமாகினர் இரண்டு கருவேங்கைகள்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.!

11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...

கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.!

நெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...

தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…

“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...

Recent Comments