கரும்புலி மேஜர் அருளன், கரும்புலி மேஜர் சசி வீரவணக்க நாள் இன்றாகும்.
05.11.1999 அன்று “ஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் பராக்கிரமபுர இராணுவ தளத்தினை தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை முல்லை மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் அருளன், கரும்புலி மேஜர் சசி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் வெற்றிக்கு வித்திட்டு புயலான தேசத்தின் புயல்கள்.!
கரும்புலி மேஜர் அருளன், கரும்புலி மேஜர் சசி நீளும் நினைவுகளாகி..!
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”