கரும்புலிகள் நினைவாக…. கரிகாலன் அணியிலே கந்தக பூக்களாய் மில்லர் அண்ணன் வழி தொடந்த கருவேங்கைகள் தன்னிகரில்லா தங்க தலைவன் வழியிலே நெருப்பு ஆயுதமாய் எங்கள் இரும்பு மனிதர்கள் வெடி மருந்தினை நெஞ்சில் சுமந்து நொடி பொழுதில் தம்மை தகர்த்திடும் அக்கினி குழந்தைகைள் இவர்கள் முகமோ முகவரியோ யாரும் அறியாமல் மறைமுக கரும்புலிகளும் இவர்களுடன் அடங்குவார். உங்கள் வீர தீயாகத்தை என்றும் நாம் மறவோம்! உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் அட உலகுக்கு எங்கே இது புரியும் கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில் நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும் ஆ..ஆ… ஆ….வேதனை யாருக்கடா தெரியும் உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் அட உலகுக்கு எங்கே இது புரியும் போய் வருகின்றோம் போய் வருகின்றோம் என்று இவர் எம்மிடம் சொல்வார்கள் இவர் பூமுகம் பார்த்து போய்வர சொல்வோம் புன்னகையாலே கொல்வார்கள். உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் அட உலகுக்கு எங்கே இது புரியும் பொத்தி பொத்தி கைகளில் இவரை பூவாய் வளர்கிறோம் கரும்புலிகளுக்கு எங்கள் உயிரினை ஊட்டி புயலாய் வளர்க்கிறோம் காலம் வரையும் தோள்களில் இவரை சுகமாய் சுமக்கிறோம் (காலம்..) இவர் கைகளை ஆட்டி போனபின்னாலே மறைவாய் அழுகிறோம் உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் அட உலகுக்கு எங்கே இது புரியும் உயிரினில் எழுதும் கவிதைகள் எனவே உறவினை வளர்ப்பார்கள் இந்த உறவுகள் ஒருநாள் விலகதும் இன்றி எரிந்திட போவார்கள் பாட்டும் கூத்தும் பகிடியுமாக பால்குடி போல் இருப்பர் (பாட்டும்..) பகைமீதினில் இவர்கள் மோதிடும் போதும் ஞானிகளா இருப்பர் உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் அட உலகுக்கு எங்கே இது புரியும் வெடித்திடும் நாளை விரல்களில் எண்ணி கணக்கெடுத்து இருப்பார்கள் இந்த வேளையும் பகைவர் மிதினில் எரியும் விருப்பினில் இருப்பார்கள் அடிக்கடி எழுதும் வரிகளில்அண்ணன் முகத்தினை கேட்பார்கள் (அடிக்கடி…) வழி அனுப்பிடும் கடைசி நொடியினில் எங்கள் உயிரினில் பூப்பார்கள் உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் அட உலகுக்கு எங்கே இது புரியும் கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில் நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும் ஆ..ஆ… ஆ….வேதனை யாருக்கடா தெரியும்.
https://youtu.be/qCgljZ11Uvo