இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கப்டன் பண்டிதர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கப்டன் பண்டிதர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

யாழ். மாவட்டம் அச்சுவேலியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை 09.01.1985 அன்று சிறிலங்கா படையினரின் சுற்றிவளைத்து ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் – தளபதியுமான கப்டன் பண்டிதர் உட்பட ஆறு மாவீரர்களின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான கப்டன் பண்டிதர் 1985ம் ஆண்டு தை 9ம் திகதி அச்சுவேலியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றை சிங்களப்படைகள் முற்றுகையிட்ட பொது இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்தார்.

பண்டிதர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். அதுமாத்திரமின்றி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப் பராமரிப்புக்கும் நிதிவளங்களுக்கும் பொறுப்பாளராக இருந்தார். வல்வெட்டித்துறைக்கு அருகேயுள்ள கம்பர்மலையை பிறப்பிடமாக கொண்டவர். அவர் வீரச்சாவடைகின்ற போது வயது இருபத்தி நான்கேயாகும்.

1977ம் ஆண்டு அமைப்பில் இணைந்து விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். கடமையுணர்வு, கடும் உழைப்பு, இலட்சியப் பற்று ஆகிய சீரிய பண்புகள் நிறைந்த கப்டன் பண்டிதர் சகபோராளிகளின் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமாக விளங்கினார். தமிழீழத் தேசியத் தலைவரின் நேசமிக்க தளபதியாக விளங்கிய பண்டிதர் விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்புக்களை சுமந்ததொடு மட்டுமல்லாது பல வெற்றிகரமான தாக்குதல்களிலும் கலந்துகொண்டார்.

தமிழீழ விடுதலைகாய் இன்னுயிரை நீத்த இவ் வீரமறவனின் நினைவோடு எம் பணி தொடர்வோம்.

விடுதலைக்கு  வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்.!

 

நீளும் நினைவுகள் :

கப்டன் பண்டிதர்.!

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

25 வருடங்கள் கடந்த வரலாற்றில் மிகப் பெரும் அவலம் நிறைந்த வலிகாம இடப்பெயர்வு

30.10.1995 மக்கள்  அளித்த மாபெரும் பங்களிப்பு   (1995) வரலாற்றுப் பதிவாகிவிட்ட மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வு. தமிழீழ மக்களின் சழூக கலாச்சார பொருளாதார மையமாகவும் தளராத கோட்டையாகவும் பொங்கிப்பிரவாகிக்கும் விடுதலைத்தீயின் பிறப்பிடமாகவும் இருந்து யாழ்ப்பாணத்தில் மண்ணும் மக்களும்...

அளவெட்டி மண்ணில் தடம்பதித்த தேசத்தின் புயல்கள்.!

29.10.1995 அன்று யாழ். மாவட்டம் அளவெட்டி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் நிலைகள் மீது ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி கப்டன் சிறைவாசன் / திலீப், கரும்புலி...

“காலவிதை” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்.!

வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீருற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து...

அளவெட்டி ஆசிரமப் படுகொலை – 26.10.1987

அளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் அமைந்துள்ள கட்டடத்திற்கு முன்பாக அளவெட்டி இந்து ஆச்சிரமம் அமைந்துள்ளது. அளவெட்டிப் பிரதேசத்திலுள்ள...

Recent Comments