இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தமிழீழத் தேசிய மாவீரர் நாள்  சிறப்பு  பதிவு கடலுக்கு அணை போட்டு கண்களை மூடியவர்.!

கடலுக்கு அணை போட்டு கண்களை மூடியவர்.!

ஏமது மண்ணை மீட்டெடுக்க தங்கள்
உயிரை தாரைவார்த்தவர்கள் தான்
மாவீரர்
 
தமிழினத்தின் கருவையே இலங்கைத்
தீவில் இருந்து கிள்ளி எறிந்துவிட வேண்டும்
என்ற இனவெறிக் கொள்கையோடுஇன்று
நேற்றல்ல , புலிகள் பிறக்கும் முன்னரே சிங்கள
அரசியல் பிறந்து விட்டது.
 
கொதிக்கும் தார்ப்பீப்பாவுக்குள் துடிக்கத்
துடிக்க தமிழ் குழந்தையை போட்டுக்
கொன்றார்கள், சிங்கள இனவெறி அன்றே
நடைமுறைக்கு வந்து விட்டது
 
இணைப்பு என்பது சிங்கள இனவாத
அரசியல் அகராதியில் தமிழின அழிப்பு
என்று அமைந்துள்ளதை உணர்ந்து தமிழன்
தன்னைக் காப்பாற்றிக் எழுந்த
கொள்ளபோது பிறந்ததே தமிழீழ விடுதலைப் புலிகள்அமைப்பு
 
 
நீதியும் நேர்மையும் மனித நெறிகளும் கூறும்
யாயத்தின் தேடுதலே எமது போராட்டம்.
 
இந்த வகையில் அத்துமீறிய சிங்கள
ஆக்கிரமிப்புக் கால்களை வெட்டிவீழ்த்தி
ணைப்பாதுகாக்கும் எமது வழி
தால் அங்கீகரிக்கப்பட்ட வழியே
 
 
உலகத்தின் பார்வையிலும் சரி நீதியின்
பார்வையிலும் சரி நாம் தூக்கியுள்ள ஆயு
தம் நீதியை நிலைநிறுத்த எழுந்துள்ள தூண்
 
உலகத்தை ஈழத்தின் பால் திருப்ப ஈழப்
பிரச்சினையாக , நீதியின் அறைகூவலாக எதி
ரொலிக்கச் செய்ய எத்தனை ஆயிரம் உயிர்
கள் ஆகுதி செய்யப்பட்டுள்ளன
 
இனவாத அரசின் சூழ்ச்சிகளுக்குப்
பலியாகாமல், விவேகமாக திட்டமிட்டு
சரியான வழியில் எம்மை அழைத்துச்
செல்லும் எமது தலைவரின் வழி நடத்தலும்
 
தலைவர் காட்டிய வழியில் துணிவோடு
செயற்பட்டு மாவீரரான மகத்தான ஆன்மாக்
களும்தான் இன்று உலகத்தை ஈழத்தின்
பால் திருப்பியுள்ளன
 
அன்று, இலங்கைத் தீவில் எல்லா மூலை
யிலும் தமிழன் சிங்கள இனவாத சக்தியால்
அடித்து நொறுக்கப்பட்டவனே. இன்று.
இலங்கைத் தீவின் சந்து பொந்திலும் கூட
தமிழன் .வெடித்து நிண்று மானம் கக்கிறான்
 
கடல் அலைபோல் இனவாத இராணு
வம் படையெடுத்தாலும் அணைபோட்டு
விலையாக உயிர் நீப்போம் என்று தூய்
மையே உருவாக தமிழ் நிலம் காத்து தங்க
ளையே தந்து எதிரியை வென்ற மாவீரரை
எண்ணுகின்ற நாள் இது
 
புலிகள் இயக்கம் என்பது தமிழீழ தேசிய
படை என்ற உன்னத நிலைக்கு இன்று
உயர்ந்துள்ளது
 
புலிகள் உயிரினும் மேலாக தமிழீழ
மக்களை நேசிக்கிறார்கள் என்பதற்கு இரத்த
சாட்சியானவர் நமது மாவீரர்.
 
 
இந்த நாளில் நமது தேசத்தின் அடிமை
விலங்குடைக்க உயிர் கொடுத்த மாவீரரை
அஞ்சலிப்போம்.
 
இரண்டு நாடுகளின் இராணுவக் கடல்
எமது விடுதலை உணர்வை மூழ்கடிக்க
இரைந்து வந்துள்ளன
 
அந்த கடல்களுக்கு அணைபோட்டு
கண்களை மூடிக் காற்றாகி எங்கள் சுவா
சத்தில் கரைந்து இரத்தமாகி உயிரோட்டம்
தரும் உன்னத ஆன்மாக்களை அஞ்சலித்து
நிமிர்வோம்
-தமிழீழ விடுதலை புலிகள் ஜேர்மன் பணிமனை.!
சூரியப்புதல்வர்கள் 1995
மாவீரர் நாள்  சிறப்பு  பதிவிலிருந்து வேர்கள்.!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

ஒளிரும் ஓவியம் கடற்கரும்புலி மேஜர் சிறி.!

அந்தச் செய்தியைக் கேட்டதும் என்னுள் இனம்புரியாத ஒரு அதிர்வு. சண்டைக் களங்களில் இப்படி நடப்பது வழமைதான். ஆனால் அவனுக்கு ஏற்பட்டதுதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. அவனது கண்கள் காட்சிகளை உள்வாங்க, எண்ணங்கள் எழுச்சியூற,...

கடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள் இன்றாகும்.! திருமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் 19.10.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் P 462 அதிவேக டோறா படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில்...

கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர், கடற்கரும்புலி கப்டன் ரூபன், கடற்கரும்புலி கப்டன் சிவகாமி வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை துறைமுகத்தில் 17.10.1995 அன்று தரித்துநின்ற சிறிலங்கா கடற்படையின் டோறாக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத்...

நெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி.!

அவள் ஒரு ஓட்ட வீராங்கனை. அவள் பங்குபற்றுகின்ற ஓட்டப்போட்டிகள் அனைத்திலுமே பரிசு வாங்காமல் வந்ததில்லை. எந்த நேரமும் கால்கள் நிலத்தில் படாதவாறு துறுதுறுத்தபடி பறந்து திரிவாள். சிவகாமி என்ற போராளி ‘மின்னல்’ என்ற சிறிலங்கா...

Recent Comments