இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home அலைகடல் நாயகர்கள் கடற்புலிகளில் ஓய்வில்லாது உழைத்த வீரத்தளபதி லெப் கேணல் மங்களேஸ்.!

கடற்புலிகளில் ஓய்வில்லாது உழைத்த வீரத்தளபதி லெப் கேணல் மங்களேஸ்.!

1990ன் ஆரம்பகால பகுதிகளில் விடுதலைப்புலிகளுடன் இனைந்து கொண்டு பலாலி காவலரனில் கடமையாற்றிய இவர் பொன்னம்மான் தாக்குதல் படையனியில் கடமையாற்றினார்.

விடுதலைப்புலிகளால் முதன் முதலில் பெயர் சூட்டப்பட்ட ஆகாய கடல் வெளி
நடவடிக்கையில் ஆரம்பம் முதல் இறுதி வரை திறம்பட செயற்பட்ட மங்களேஸ் 1991ம் ஆண்டு இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட மின்னல் இராணுவச்சமரில் திறன்பட செயற்பட்டார்.


பின்னர் யாழ்மாவட்ட படையனியில் இனைந்துகொண்டு பலாலி வசாவிளான் 150 காவலரன் தகர்ப்பு தாக்குதலில் ஈடுபட்டு தனது கன்னத்தில் வீரத்தழும்படைந்தார். 1992 இறுதி பகுதியில் கடற்புலிகளுடன் இனைந்து கொண்டார்.கட்டைக்காடு முகாம் தாக்குதல் என பல தாக்குதலில் பங்குபற்றிய பெருமை இவருக்கே உள்ளது.விடுதலைப்புலிகளின் தவளை நடவடிக்கையில் முக்கியமாக நாகதேவன்துறை முகாமை கைப்பற்றுவதற்காக கடல்வழியாக நகர்ந்து சென்று தாக்கும் படையனியின் இரண்டாவது தாக்குதல் கட்டளைத்தளபதியாகவும் உள்நுழையும் அணியின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்று நாகதேவன்துறை முகாமை கைப்பற்றி 5 நீரூந்து விசைப்படகை கைப்பறியதற்கு இவரது கடமை மிகமுக்கியமாக இருந்தது.இதன் பின்னர் வண்னிமாவட்ட கடற்புலிகளின் தளபதியாக இருந்த மங்களேஸ் 199;,1995,1996 காலப்பகுதியில் சாளை கடற்பரப்பில் மேற்க்கொள்லப்பட்ட ஆழ்கடல் ஆயுத விநியோக நடவடிகையின் கட்டளை அதிகாரியாகவும், கிழக்கு மாகாணத்திற்கான கடல்வழி விநயோகத்திற்கான வசந்தன் படையணியின் கட்டளைத்தளபதியாகவும் செயற்பட்டார். ஓயாத அலைகள் 1 நடவடிக்கையில் வசந்தன் படையணியின் தொகுதி கட்டளை அதிகாரியாக செயற்பட்டு முல்லைத்தீவு சிலாவத்துறையில் கடற்படையின் தரையிறக்கத்துற்கு எதிரான தாக்குதலில் மங்களேஸ் தனது ஒரு கையில் படுகாயம்மடைந்தார்.

இதன் பின் மட்டக்களப்புமாவட்டத்திற்கான விநியோக நடவடிக்கையில் தலமைதாங்கி ஈடுபட்டபோது புடவைக்கட்டுப்பகுதியில் கடற்படையினருடன் ஏற்பட்ட சன்டையில் தனது வயிற்றுப்பகுதியில் படுகாயமடைந்து வீரச்சாவடைந்துவிட்டதாக கருதப்பட்ட இவர் மருத்துவர்களின் தீவிரமாக செயற்பட்டு இவரை உயிரைக்காப்பாற்றினார்கள்.


தளபதி மங்களேஸ் ஓய்வின் பின் மன்னார் மாவட்ட கடற்புலிகளின் தளபதியாக பணியேற்றார். ஓயாத அலைகள் 3 கன்டல் பகுதியூடான கடல்நடவடிக்கையிலும், குடாரப்பு பெரும் தரையிறக்கம் இராணுவ நடவடிக்கையிலும் முக்கிய பங்காற்றினார் தளபதி மங்களேஸ்.

2001 ம் ஆண்டு கடற்புலிகளின் தளபதியாக தேசியத்தலைவரால் நியமிக்கப்டு 2007 வரை திறன்பட செயற்பட்டார். 2006  8ம் மாதம் யாழ் மாவட்டத்திற்கான விடுதலைப்புலிகளினால் பாரிய தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட போது கறுக்காய்த்தீவில் இருந்து பாரிய தாக்குதலுக்கும் தரையிறக்கத்திற்கும் முழுமையான கட்டளைத்தளபதியாகவும் தளபதியாகவும் திறன்பட செயற்பட்ட மிகப்பெரிய தளபதி மங்களேஸ்.இதற்குடையில் 2004ம் ஆண்டில் திருமணபந்தத்தில் இனைந்து ஒரு பெண் குழந்தையும் உண்டு.2007ல் சிங்கள இராணுவத்தின் பாரிய முன்நகர்வு ஆரம்பிக்கப்பட்டபோது தேசியத்தலைவரினால் மன்னார் கட்டளைப்னியகத்திற்கு நியமிக்கப்பட்டு பல வழிந்த தாக்குதளையும் பல வெற்றிகரமான முறியடிப்பு சன்டைகளையும் செய்து அன்று பாப்பாமோட்டையில் முன்நகர்ந்த சிங்கள இரிணுவத்தை தடுத்து நிறுத்தி அவனை பின்நோக்கி ஓட வைத்து அதே சன்டையில் 08,03,2008 தான் மிகவும் ஆழமாக நேசித்த தாய் மண்ணை முத்தமிட்டுக்கொண்டார் கடற்புலிகளின் தளபதி லெப் கேணல் மங்களேஸ்.

ஆக்கம் : கடலிலே காவியம் படைப்போம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கரும்புலி மேஜர் சதா

25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...

லெப் கேணல் பிரசாந்தன்

லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 07.07.1972 வீரச்சாவு: 25.05.1999 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு   1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை...

கரும்புலி மேஜர் குமலவன்

"ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற...

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர்  சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில்...

Recent Comments