இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி  மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன், கடற்கரும்புலி  கப்டன் லக்ஸ்மன் வீரவணக்க நாள் இன்றாகும்.

மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி  மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி, கடற்கரும்புலி  கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன்  ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!

சிறிலங்கா கடற்படையின் ஒரு கப்பல் தளபதியை, தமிழீழக் கடற்படையின் ஒரு பெண் தளபதி சிறைப்பிடித்தாள். அவர் உயிரைக் காக்க சரணடைந்தார். இவள் வெற்றியைப் பெற உயிர் துறந்தாள்.

– தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கடற்புலி மகளிர் சிறப்புத் தளபதி கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி அவர்கள் பற்றி விபரிக்கையில்

 

“சாகரவர்த்தனா” போர்க்கப்பலில் கைப்பற்றபப்ட்ட ஆயுதங்களைப் பார்வையிடும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்.!

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...

Recent Comments