இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கடற்கரும்புலி லெப்.கேணல் சிலம்பரசன், உட்பட 11 போராளிகளின் 16 ம் ஆண்டு வீரவணக்க...

கடற்கரும்புலி லெப்.கேணல் சிலம்பரசன், உட்பட 11 போராளிகளின் 16 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.!

விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலில் காவியமானவர்களின்  வீரவணக்க நாள் இன்றாகும்.

10.03.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி ‘கப்பல் கப்டன்’ லெப்.கேணல் சிலம்பரசன்,  உட்பட 11 போராளிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

எமது விடுதலைப் போராட்டத்திற்கு அடி நாதமாகவும், ஆணிவேராகவும் இருக்கும் மூலாதாரங்களை கொண்டுவந்து சேர்க்கவும். அடக்கு முறையாளர்களின் தடைகளால் அல்லலுறும் எம் மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொண்டுவந்து கரை சேர்க்கவும் என கடற்புலிகளின் கப்பல்கள் வையப்பரப்பிலுள்ள கடலெல்லாம் சென்று வந்தன.

“வெளியே தெரிந்ததுமாய் உள்ளே மட்டும் அறிந்ததுமாய்” அளப்பெரிய பணிகளை இந்தக் கடலோடிகள் செய்து முடித்தனர்.

உயிரைக் கூட துச்சமாக மதித்து சர்வதேசக் கடற்பரப்பின் விரிப்பில் ஒர்மமுள்ள எம் கடலோடிகளின் வீரம் செறிந்த சாதனைகள் முலமே எம் விடுதலைப் போராட்டம் எவராலும் அணைக்கமுடியாத பெரும் தீயாக முளாசி எரிகின்றது.

எமது தேசியத் தலைவரின் வழிநடத்தலில் கடற்புலிகள் ஆற்றிய சாதனைகள் கால வரலாறாக விளங்கும்.

இந்த மானமறவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

சிறப்புத் தளபதி லெப். கேணல் மதனா

வவுணதீவில் வரலாறு எழுதியவள்-சிறப்புத் தளபதி லெப். கேணல் மதனா மட்டக்களப்பில் போராட்டத்துக்கு மேன்மேலும் ஆளணியைச் சேர்ப்பதில் ஈடுபட்டு, பயிற்சி வழங்கி, படையணியைக் கட்டி வளர்த்ததில் அவள் பங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டம் இவர்களுக்கு மிகவும் வேதனையும்,...

கரும்புலி மேஜர் சிற்றம்பலம் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

கரும்புலி மேஜர் சிற்றம்பலம், கரும்புலி கப்டன் விஜயரூபன், கரும்புலி கப்டன் நிவேதன் ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் தமிழீழத்தின் தலைநகர் திருமலை சீனன்குடா விமானத்தளத்தில் ஊடுருவி 06.03.1997 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலில்...

லெப்.கேணல் பாலேந்திரா, லெப்.கேணல் மதனா வீரவணக்க நாள்

லெப். கேணல் பாலேந்திரா, லெப். கேணல் மதனா உட்பட ஏனைய மாவீரகளின் வீரவணக்க நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவுப் பகுதியில் 06.03.1997 அன்று சிறிலங்கா படைமுகாம் மற்றும் கட்டளைத் தலைமையகம் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்...

கரும்புலி மேஜர் சிற்றம்பலம்.!

என்றைக்குமே வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த முகாம் இன்றும் அதேபோல இயங்கிக்கொண்டிருந்தது. தலைநகரில் தங்கள் உயிர்களைக் கொடுக்கச் செய்து முடிக்கப்போகும் அந்தத் தாக்குதலுக்காய் அவர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருகிறார்கள். ஆனால் அவைகள் முன் எழுந்த...

Recent Comments