இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட ஏனைய தளபதிகள் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட ஏனைய தளபதிகள் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட மேஜர் பசிலன், லெப். கேணல் தூயவன், லெப். கேணல் அறிவு வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் வித்தி மற்றும் வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன், யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் தூயவன், திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் அறிவு ஆகிய மாவீரர்களின் வீரவணக்கக் நாள் இன்றாகும்.

 

யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து 08.11.1994 சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமான A 838 “பபதா” கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வித்தி / வேதமணி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

 

முல்லை மாவட்டத்தில் 08.11.1987 அன்று இந்தியப் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய வன்னி மாவட்ட முன்னாள் படைத்தளபதி மேஜர் பசீலன் ஆகிய மாவீரரின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

 

மன்னார் பூநகரி கடற்பரப்பில் 08.11.1999 அன்று தவறுதலாக இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் தூயவன் / திலக் ஆகிய மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் 08.11.2006 அன்று சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் அறிவு ஆகிய மாவீரரின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

துன்கிந்த கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

“துன்கிந்த” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலி மேஜர் கடலரசன், கடற்கரும்புலி மேஜர் கஸ்தூரி, கடற்கரும்புலி கப்டன் அன்புமலர், கடற்கரும்புலி கப்டன் கனியின்பன் வீரவணக்க நாள் இன்றாகும். 30.10.2001 அன்று யாழ். மாவட்டம்...

கடற்புலி லெப். கேணல் வரதா / ஆதி

கடற்புலி லெப். கேணல் வரதா / ஆதி தமிழீழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம்.வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் வல்லவர்கள் மட்டுமல்ல,வரலாற்றில்...

லெப்.கேணல் அகிலா

எங்கள் போராட்ட வரலாற்றில் அவர் ஓர் தனி அத்தியாயம்.! எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை,...

25 வருடங்கள் கடந்த வரலாற்றில் மிகப் பெரும் அவலம் நிறைந்த வலிகாம இடப்பெயர்வு

30.10.1995 மக்கள்  அளித்த மாபெரும் பங்களிப்பு   (1995) வரலாற்றுப் பதிவாகிவிட்ட மாபெரும் யாழ்ப்பாண இடப்பெயர்வு. தமிழீழ மக்களின் சழூக கலாச்சார பொருளாதார மையமாகவும் தளராத கோட்டையாகவும் பொங்கிப்பிரவாகிக்கும் விடுதலைத்தீயின் பிறப்பிடமாகவும் இருந்து யாழ்ப்பாணத்தில் மண்ணும் மக்களும்...

Recent Comments