இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன், கடற்கரும்புலி கப்டன் சயந்தன் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன், கடற்கரும்புலி கப்டன் சயந்தன் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன், கடற்கரும்புலி கப்டன் சயந்தன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

முல்லைப் படைத்தளம் மீதான ஓயாத அலைகள் 01 நடவடிக்கையில் 21.07.1996 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் தரையிறக்கும் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன், கடற்கரும்புலி கப்டன் சயந்தன் உட்பட ஏனைய (12) மாவீரர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

முல்லைத்தீவு படைத்தளம் மீதான “ஓயாத அலைகள் – 01” நடவடிக்கை 18.07.1996 அன்று தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவு தளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படை தரையிறங்கு கலங்கள் மீது கடற்புலிகளால் கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

21.07.1996 அன்று 600 படையினருடன் அலம்பில் கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தரையிறங்கு கலத்தினை இலக்கு வைத்து கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் மற்றும் கடற்கரும்புலி கப்டன் சயந்தன் ஆகியோரால் தாக்குதல் நடாத்தப்பட்டது.

கரும்புலிப் படகு தரையிறங்கு கலத்தினை நெருங்கி வருவதை கண்டுகொண்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரு சேர கடற்கரும்புலிகளின் படகின் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். கடற்படையின் தாக்குதலில் சிக்காதவாறு கடற்கரும்புலிகள் தமது படகினை செலுத்தி தரையிறங்கு கலத்தினை நெருங்கியவேளை எதிர்பாராதவிதமாக படகு வெடித்துச் சிதறியது.

இதனால் குறித்த தரையிறங்கு கலமும் அதில் சென்ற 600 படையினரும் மயிரிழையில் உயிர் தப்பினர்.

வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்….!

கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் (வேதாரணியம் ஜெயக்காந்தன் – சங்கத்தானை, யாழ்ப்பாணம்)
கடற்கரும்புலி கப்டன் சயந்தன் (தம்பிப்பிள்ளை துரைரத்தினம் – அக்கரைப்பற்று, அம்பாறை)
மேஜர் யோகேஸ் (பூரணம் நவரட்ணகாந்தன் – கும்புறுப்பிட்டி, திருகோணமலை)
கப்டன் காயத்திரி (தர்மலிங்கம் விஜிதா – குமுழமுனை, முல்லைத்தீவு)
கப்டன் முகிலன் (மித்தன்) (ஆறுமுகம் தர்மலிங்கம் – கரடியனாறு, மட்டக்களப்பு)
கப்டன் பழனிமுத்து (அருளானந்தம் விமலதாஸ் – தாளையடி, யாழ்ப்பாணம்)
கப்டன் மறைமலை (சிற்றம்பலம் ஈழத்துநாதன் – திருகோணமலை)
லெப்டினன்ட் வைகை (முத்திராமநாதன் தவக்கொடி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஓவியா (செபஸ்ரியான்பிள்ளை பத்மசகாயகுனேந்தினி – சேந்தான்குளம், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இசையரசி (ஜோர்ச் ரூபினா – மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இசைப்பிரியன் (சாமித்தம்பி கணேசமூர்த்தி – அக்கரைப்பற்று , அம்பாறை)
வீரவேங்கை புகழன் (கந்தசாமி சிவபாலன் கிரான், மட்டக்களப்பு)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்
காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...

Recent Comments