இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கடற்கரும்புலி மேஜர் நாவலன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி மேஜர் நாவலன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன் வானதி வீரவணக்க நாள் இன்றாகும்.

முல்லை கடற்பரப்பில் 24.03.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் “பராக்கிரமபாகு” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நாவலன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மாறன், கடற்கரும்புலி கப்டன் கலைவள்ளி, கடற்கரும்புலி கப்டன் வானதி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலைப் புலிகளின் சாலைக் கடற்படைத் தளம் மீது தாக்குதல் செய்வதற்கான பெரும் கடற்கலங்கள் என பலமான நிலையில் வந்த சிறிலங்கா கடற்படையினர் மீது மூண்ட கடற்சமரில் தாக்குதலில் இலக்காக “பராக்கிரமபாகு” கப்பல் தேர்வாகி அதன் மீது தாக்குதல் நடத்த டோறாக் கலங்களை ஊடறுத்து விரைந்த கரும்புலிப் படகுகள் மீது பராக்கிரமபாகு கப்பலிருந்து மேற்கொள்ளப்பட்ட பீரங்கி சூட்டாதரவால் இலக்கை எட்ட முன்பே கரும்புலிப் படகு தீப்பற்றி வெடித்ததில் நான்கு கடற்கரும்புலிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொள்கின்றனர்.

ஐந்தரை மணிநேரச் சண்டையில் இவர்களுடன் லெப்டினன்ட் சுகுணன் (மாவேந்தன்) எனும் கடற்புலிப் போராளியும் கடலிலே காவியம் படைத்தார்.

வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்

 

 

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments