இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home கரும்புலி உயிராயுதம் கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்

கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்

கடற்கரும்புலி

மேஜர் தணிகைமாறன்
யாக்கோப் அன்ரன் பெனடிற்
கட்டைக்காடு, யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு:28.06.1970

வீரச்சாவு:19.04.1995

நிகழ்வு:திருகோணமலை துறைமுகத்தினுள் வைத்து சிறிலங்கா கடற்படையின் சூரயா, ரணசுரு கப்பல்களை மூழ்கடித்து வீரச்சாவு

 


மண்பற்றும் மனிதப்பற்றும் உருவாக்கிய மகத்தான வீரன் கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்.!

” தம்பி நீ சைக்கில்லை போய் கோயிலில் நில் நாங்கள் நடந்துவாறம் ”  அம்மா அன்பாய் கேட்டுக்கொண்டாள்.

” இல்லையம்மா நானும் உங்களோட நடந்துவாறன். அப்பத்தான் நிறைய ஊராக்களைக்கண்டு கதைக்கலாம். ”

அம்மா பாவம். அவளிற்கு அப்போது எதுவும் புரியவில்லை.

பிள்ளை வழமையா விடுமுறையில் வந்து நிக்கிறதைப் போலதான் இந்த முறையும் வந்து நிக்கிறான் என நினைத்தாள்.

ஆனால் தன் மகனின் நெஞ்சுக்குள்ளேயே குமுறிக்கொண்டிருக்கும் இலட்சிய நெருப்பை அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை.

இரவு நேர கோயில் திருவிழா என்பதால் அவனிற்கு தெரிந்த அதிகமானவர்கள் அங்கே வந்திருந்தார்கள்.

எல்லோரது கைகளையும் பற்றி சந்தோசமாகச் சிரித்துக் கதைத்தான். விடைபெற்றுச் செல்லுகின்ற ஒவ்வோஐவருக்கும் அன்பாய் விடை கொடுத்தான்.

மகனின் எளிமையான மனதினையும் எல்லோரிலும் பாசம் வைக்கும் தன்மையினையும் கண்டு அம்மா மனதிற்குள் பெருமைப்பட்டுக்கொண்டாள்.

இந்த மகன் தான் அன்றைய இரவு எட்டு மணி என்றும் பாராது வீட்டை வந்து உடனேயே அம்மாவுக்கு அன்பாய்த் தொல்லை கொடுத்தவன்.

” நான் காலமை போயிடுவன். எனக்கு ஏராளமான வேலையிருக்கி. எனக்கிப்ப உணர கையால சமைச்சு சாப்பாடு தரவேணும் ”  என்றான்.

மகன் அமாவோடு இப்படிச் செல்லமா அடம்பிடிப்பது வழமை. அதனால் அம்மா எதையும் யோசிக்கவில்லை.

” வேலையா ..? என்னடா எங்க தூரப்பயணமோ ….? ” தயங்கித் தயங்கி அம்மா கேட்டாள்.

மகன் சிரித்தான். தாயின் கைகைளை அன்பாய் பிடித்து அணைத்தான்.

” திருகோணமலைக்கு போறன். எப்படியும் வந்திடுவன். வராட்டி பொடியளிட்டை சொல்லிவிடுவன் ” மீண்டும் மகன் சிரித்தான். அம்மா கவனிக்கவில்லை.

அம்மா இரவோடு இரவாக கோழிக்கறி காய்ச்சி தன்ர கையால மகனிற்கு சாப்பாடு கொடுத்தாள். அவன் சாப்பிடவில்லை.

சாப்பாட்டைப் பார்த்து மெளனமாயிருந்தான்.

மகன் சாப்பிடவில்லை என்றதும் தாய் துடித்துப் போனாள்.

” அம்மா தனியச்சாப்பிட ஒரு மாதிரிக் கிடக்கு. ஊர்ப்பொடியன்கள் கொஞ்சப் பேரைக் கூட்டிவாம்மா. ”

மகன் கேட்டபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் சின்னனில இருந்து எல்லோரிலும் பாசம் கொண்டவன் என்று அம்மாவிற்கு தெரியும்.

அம்மா அவன் பழகிய ஊர்ப்பொடியலை நித்திரியில் இருந்து எழுப்பி வந்தாள்.

முற்றத்தில் எல்லோரையும் வட்டமாய் இருத்தி மகனே எலோருக்கும் சாப்பாட்டைப் பகிர்ந்துகொடுத்தான்.

” அம்மா இந்தாங்கோ இதைச் சாப்பிடுங்கோ ” தங்கையினால் பிசைந்து அளைந்த சாப்பாட்டில் பாதியை அம்மாவிடம் நீட்டினான்.

அம்மாவும் வாங்கிச் சாப்பிட்டாள். எல்லாம் முடிந்த பிறகு ” அம்மா காலமை வேளைக்கு என்னை எழுப்பிவிடு ” பாயில படுத்தான். ஆழமாக உறங்கினான்.

காலை விடிந்ததுமே சைக்கிளையும் எடுத்துக் கொண்டு அம்மாவிற்கு – அப்பாவிற்கு தங்கைமாருக்கு , தம்பிமாருக்கென்று எல்லோருக்கும் தானியத் தனிய போட்டுவாறன் சொல்லி வாசல்வரியா புறப்பட்டான்.

” 10 மணிக்கு வாகனத்தில் வந்து கூட்டிக்கொண்டு போறம் என்றல்லா சொல்லிப்போட்டு போனவர்கள். ஏன்ரா இப்பவே. ” அம்மா மெதுவான குரலில் இழுத்தாள்.

” ஊரில எல்லோருக்கும் சொல்லிப்போட்டு போகவேணும். இப்பவே போனாத்தான் சொல்லிப்போட்டுப் போகலாம். ”

சொல்லிவிட்டு மகன் சிரித்தான். வீட்டுக்காரரைப்போல ஊரவர் ஒவ்வொருவரையும் நேசிப்பவந்தான் தனது மகன் என்று அம்மாவிற்குத் தெரியும். அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

மகன் போய்விட்டான் ; அம்மா பாவம் எதுவும் புரியவில்லை. காத்திருந்தாள்.

தன் மகன் தன்னிடம் இறுதியாகத்தான் விடைபெற்றுப் போகிறான் என்று அவளிற்குத் தெரியாது.

இன்னும் ஒரு பகலும் ஒரு இரவும் கழித்தால் தன் மகன் இலக்கினை நோக்கிச் சென்றுவிடுவான் என்று அறிந்தால் பெற்றவள் தாங்கிக்கொள்வாளா…?

ஆனால் அவனிற்கு தெரியும்.

இன்னும் ஒரு இரவினதும் பகலினதும் இடைவெளிக்குள் தான் கதைப்பது சிரிப்பது கலகலப்பது எல்லாம் என்று.

அதற்கிடையில் தான் நேசித்த ஒவ்வொருவரிற்கும் இறுதி விடை கொடுத்துக்கொண்டிருந்தான்.

அவன் ஊரவர்களை , தனது உறவினரை நேசித்த நேசப்பிற்க்குள் எத்தனை புனிதமான உணர்வுகள் பொதிந்திருந்தன. அந்த ஊரவர்களின் துயரம் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல்த்தானே அவனது மூச்சு புயலாக மையம் கொண்டது.

ஒவ்வொருவரையும் மிக மென்மையாக நேசித்த அவனிற்கு ஒரே இரவில் ஒன்பது ஊரவர்கள் கடற்படையால் குதறப்பட்ட சேதியை தாங்கிக் கொள்ள முடியாததாய் இருந்தது.

இந்த நிகழ்வு அவனின் நெஞ்சத்தை மட்டுமல்ல உயிரையே சுட்டது.

அப்போது அவன் இயக்கவேலை காரணமாக மன்னாரில் நின்றான்.

ஒன்பது இரத்த உறவுகளும் ஒரேடியாக வேட்டையாடப்பட்டனர் என்ற சோகம் தோளைத் தொடர்பு சாதனம் மூலம் தான் அவனிற்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை நம்ப கஸ்ரமாக இருந்தது.

கடலில் அன்றாடம் மீன்பிடித்து வாழ்க்கை நடத்துகின்ற வெற்றிலைக்கேணி கிராமத்திலா இப்படி.

” அம்பாச் ” சொல்லி வலையிழுக்கும் சத்தமும் , ” ஏலேலோ ” பாடி படகிறக்கும் ஓசையும் , கரைமுட்டி அலைபாடும் ராகமும் காற்றில் சந்தோசமாக கலக்கின்ற ஊரிலா இப்போ ஒப்பாரி ஓலங்கள் …?

கரையிலேயே தவண்டு , அலையிலே நண்டு பிடித்து , கடலிலே தொழில் செய்த மனிலையா இப்போ வெறியாட்டம்.

” அழுகுரலும் , அவலமும் நிறைந்திருக்கும் ஊரிப்பார்த்து , நான் எப்படித் தாங்கிக்கொள்ளப் போறன். ”

ஒரு சில கணத்திற்குள் எத்தனையோ சிந்தனை மின்னலகுள் பளிச்சிட்டு மறைந்தன.

” அவங்கள் நினைச்சதைச் செய்து போட்டாங்கள் , நான் நினைக்கிறதைச் செய்து முடிப்பன் ”

அடிமனதில் இருந்து இறுக்கமான வார்த்தைகள் வெளிவந்த பொது கண்கள் பிரகாசித்தன.

இயக்கம் வழங்கிய பணியினை முடித்துவிட்டு ஊர்திரும்பினான்.

உடல் பிளந்து குழிகளிற்க்குள் கிடந்த சடலங்களிற்கு மண்ணள்ளிப் போடுகிறபோது அவனது நெஞ்சுக்குள்ளேயே எடுத்துக்கொண்ட இலட்சியத்தின் மீது பலதடவை சத்தியம் செய்து கொண்டான்.

“எந்தக் கடற்படை இத்தனை உறவுகளின் சாவிற்கு காரணமாய் கோரத்தனம் புரிந்ததோ, எந்தக் கடற்படை அமைதியை இருந்த ஊரை அடிவயிற்றிலிருந்து ஓலமிட்டு ஒப்பாரி வைக்கச் செய்ததோ, அந்தக் கடற்படையை அழிக்க வேணும்.”

அனத்பின் அவனது செய்கைகளில் மாற்றமிருந்தது. அவனிற்குள்ளேயே பற்றிக்கொண்ட இலட்சிய நெருப்பு அனல்கக்கத் தொடங்கியது.

தனது துடிப்பையும் உணர்வுக்குமுரளையும் தலைவரிற்கு கடித மூலம் தெரியப்படுத்தினான்.

அனுமதி கிடைத்தது.

ஏற்கனவே உடலில் ஏராளமான விழுப்புண்கள் இருந்தாலும் , அவன் உடலை வருத்தி பயிற்சிகளில் தீவிரம் காட்டினான்.

உப்புத் தண்ணீருக்குள் இரவுபகலாய் உடல் ஊறி க்கொண்டிருந்தது. ஊறி … ஊறி நாளுக்கு நாள் வைரம் பெற்றது.

இதுவரை பெற்ற பயிற்சிகளின் படி எப்படியும் இலக்கி அழித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அனாலும் சிறிது கூட இந்த இலக்கை தவறவிடக்கூடாது என்று மனம் துடித்து , அவன் கடல் வேவு அணிகளுடன் சேர்ந்து வேவுபார்க்கச் சென்றான்.

இலக்கை கைகளால் தொடும் தூரம் வரை சென்று இலக்கை , அதன் அமைவிடத்ஹை அவனே பார்த்து உறுதி செய்துகொண்டான்.

இந்த இலக்கை எப்போது அழிப்பது என்று தேதி குறித்த பின்பே அவன் , ஊரவறிற்கு , தன் பெற்றவருக்கு , உடன் பிறந்தவர்களுக்கு இறுதி விடை கொடுக்க வந்தான்.

ஊரவர்க்கு விடை சொல்லி , தன் உடன்பிறப்புகளுக்கு விடை சொல்லி , பெற்றவர்களுக்கு விடை சொலி , தன்பிள்ளை மீண்டும் வருவான் எனத் தாய் காத்திருக்க அவன் முகாம் திரும்பினான்.

விடுமுறை முடித்து வந்த உடனேயே தாக்குதலிற்குச்  செல்வதற்கு ஆயத்தமானான்.

எல்லா போராளிகளும் ஆராவாரமாகச் சிரிக்கும்படி செய்து தானும் கலகலவெனச் சிரித்தான்.

தலைவரைப் பற்றியும்  எமது போராட்டம் வெல்லப்போவது பற்றியும் கூறிக்கூறி மகிழ்ந்தான்.

இறுதிநேரம் எலோறது இமைகளும் கசிந்தன.

இதயம் துடித்தது.

ஆனால் இலக்கினை நோக்கிச் செல்கின்ற கரும்புலிகள் மட்டும் சிரித்து எல்லோருக்கும் விடைகொடுத்தனர்.

அதிசிறப்பு நீராடி நீச்சல் பிரிவுகளான , சுலோஜன் நீராடி நீச்சல் பிரிவிலிருந்து இரண்டு கரும்புலி வீரர்களும் , அங்கையற்கண்ணி நீராடி நீச்சல் பிரிவிலிருந்து இரண்டு கரும்புலி வீராங்கனைகளுமாக  , நான்கு கரும்புலிகளையும் சுமந்து படகு புறப்ப்டட்டது.

கண்களிலிருந்து கரை மெல்ல மெல்ல மறையத்தொடங்கியது. அவனது மனதினில் கிராமங்களின் நினைவு  நிறைந்திருந்தது.

அலைகளால் அணைக்கப்படுகின்ற கரையோர கிராமங்களை எல்லா கரும்புலிகளின் இமைகளும் வருடிச்சென்றன.

வெற்றிலைகேணி கிராமம் வந்ததும் தணிகைமாறன் தீயில் மிதித்தவனைப் போல எழுந்தான்.

அவனை அறியாது அவனது சுட்டுவிரல் அந்தக் கிராமத்தைச் சுட்டியது. அவனது கண்களுக்குள் ஈரம் கசிவது தெரிந்தது. மெதுமெதுவாக அவனது உள்ளக்கிடக்கையைத் திறந்தான்.

” இதுதான் மச்சான் சின்னனில நான் பிறந்து வாழ்ந்த இடம். இதில்தான் என்ற உறவுகள் ஒன்பது பேரின்ர உயிரைக் குடிச்சவங்கள்….”  அந்த இடத்தில் அவனைவிட வேறுயாரும் கதைக்கவில்லை. நீண்டதொரு மெளனத்திரை மூடியது.

” என்ற ஊரை அழிச்சுப்போட்டு அதில குடியிருக்கிற இராணுவத்திற்கு துணையாக வந்து போற கடற்ப்படையை அழிக்கத்தான் என்ற ஊரையும் தாண்டிப் போறான் ” அமைதித்திரையினைக் கலைத்து மறுபடியும் அவனின் குரலே பேசியது.

அந்த ஊரின் மேலே அவன் வைத்திருந்த பாசத்திர்க்காகத்தானே இன்று வெடிமருந்துப் பொதிகளோடு , அழித்தவர்களை அழிக்கச் சென்று கொண்டிருந்தான்.

“என்ற ஊரை அழித்தவர்கள் எங்க இருந்தாலும் விடமாட்டன்”

அவனின் ரோமங்கள் குத்தி நின்றன.

அவன் கூறி முடிக்கின்ற போது படகு அந்தக்கிராமத்தைத் தாண்டி நீண்ட தூரம் சென்றுவிட்டது.

நீண்ட தூரம் படகுகளும்  அலையும் மட்டும் ஏதேதோ பேசிக்கொண்டு வந்தன.

கரும்புலிகள் படகிலிருந்து இறங்கி நீருக்கு அடியாள் செலவேண்டிய தூரம் வந்துவிட்டது.

எல்லோரும் படகில் இருந்தவாறு வெடிமருந்து பொருட்களையும் , வாயு உருளைகளையும் உடலோடு இறுக்கமாக கட்டினார்கள். முகத்தினை மூடி சுவாசம் போடமுன் ஒருவரையொருவர் பார்த்து உறுதியாகப் புன்னகைத்துக் கொண்டனர். அவர்களது புன்னகைக்குப் பின்னால் பெரும் பூகம்பங்கள் உறங்கிக்கிடந்தன.

முகக்கவசங்க்களை அணிந்து கொண்டு ஒவ்வொருவரும் நீருக்கடியில் நீந்தத்தொடங்கினார்கள். நீர்குமிழிகளிற்கும் அலைகளிற்கும் மட்டுமே அந்த எரிமலைகளின் தடங்கள் தெரிந்தது.

கரும்புலிகள் நகரத் தொடங்கி கொஞ்ச நேரத்திற்குள் மழை ” சோ ” வெனக் கொட்ட ஆரம்பித்தது. கடுமழை.

காற்றுடன் கூடிய பெருமழை. இடியுடனேயே மின்னல் இருளைக் கிழித்து அலையைத் தொட்டது.

இடி . அமைதியைக் கலைத்தது எங்கும் அதிரவைத்தது.

இயற்கையின் அமைதிகலைப்பு கரும்புலிகளின் நகர்விற்கு துணை நின்றது.

துறைமுகத்தினுள் காவல் நின்ற கடற்படையினர் மழைக்கவசங்க்களோடு அங்குமிங்கும் எதையோ தேடுவதைப்போல நின்றார்கள்.

அதைவிட அந்தப்பகுதியை சுற்றிச்சுற்றி ரோந்துப்படகுகள் வந்து போயின. அவற்றில் பொருத்தப்பட்ட பெரிய ” ராடர்கள் ” மின்னல் வெளிச்சத்தில் பளிச்சிட்டன.

இத்தனை பாதுகாப்புக்களையும் மீறி கரும்புலிகள் கபப்ளைத் தொடும் தூரத்திர்க்குச் சென்றுவிட்டார்கள். இலக்கு தவறவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வினாடியும் மிக அவதானமாக செயற்பட்டான் தணிகைமாறன்.

பெரும் காற்றிற்கும் அலைகள் ஒருமுறை பொங்கிக் கொதித்தன.

” என்ர ஊரை அழித்தவனை எங்க இருந்தாலும் விடமாட்டன் ”  அவனது சபதம் நிறைவேற இதுவே நேரம். அமைதி. கடலினில் ஒரே அமைதி. நேரம் நள்ளிரவு 12 : 45 மணி.  திருகோணமலைத் துறைமுகமே ஒரு முறை குலுங்கி அடங்கியது.

அதியுயர் பாதுகாப்பு வலயம் கடற்படையினரின் அவலக்குரலாய் நிறைந்தது.

மீண்டும் ஐந்து நிமிட இடைவெளியில் இன்னொரு பெருவெடி.

” ரணசுறு ”  –  ” சூரையா ” என்ற இரண்டு போர்க்கப்பல்கள் கடலிற்குள் அமிழ்ந்தன.

அந்தத் திருகோணமலையில் தணிகைமாறனுடன் இணைந்து கரும்புலிகள் எழுப்பிய வெடியதிர்வு மூன்றாம் ஈழப்போரின் முரசொலியாய் அதிர்ந்டஹ்து. அது இத்தனை காலமும் பேச்சுகள் , சமாதானம் என்று இழுத்தடிப்புச் செய்தவர்களிற்கு பிரபாகரன் படைகள் ஏமாளிகள் இல்லை என்று சொல்லி அதிர்ந்தது.

“…. என்ர  ஊரை  அழிச்சவங்கள் எங்க இருந்தாலும் விடமாட்டேன் … ”  நேரம் நள்ளிரவு 12 : 45 மணி.  திருமலை துறைமுகமே ஒருமுறை குலுங்கி அடங்கியது.

கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன் பங்கு பற்றிய தாக்குதல்கள்….

* முதல் குத்தி தேசத்துரோகிகளின் இராணுவமுகாம் தகர்ப்பு.

* பம்பைமடு தேசத்துரோகிகளின் இராணுவமுகாம் தகர்ப்பு.

* மண்டைதீவு சிறிலங்கா இராணுவத்துடன் நேரடிச் சமர்.

* யாழ் கோட்டை சமர்.

* ஆனையிறவு ஆகாய கடல் வெளிச்சமர்.

* மாமடு ( வவுனியா ) தொடர் காவலரண் தகர்ப்பு.

* சாகரவர்த்தனா கப்பல் மூழ்கடிப்புக்கு முழுமையான வேவுப்பணி.

– துளசிச்செல்வன்.
வெளியீடு :விடுதலைப்புலிகள் ஆவணி – புரட்டாசி,1999 

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments