இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home கரும்புலி கரும்புலிகள் கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை, கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரான், கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபன், கடற்கரும்புலி மேஜர் பதுமன், கடற்கரும்புலி மேஜர் சுடரொளி வீரவணக்க நாள் இன்றாகும்.
 
19.07.1996 அன்று “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கையின் போது முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் P 321 “ரணவிரு” பீரங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை, கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரான், கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபன், கடற்கரும்புலி மேஜர் பதுமன், கடற்கரும்புலி மேஜர் சுடரொளி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
முல்லைத்தீவு இராணுவத் தளத்தில் தாக்குதலுக்குள்ளாகும் படையிருக்கு சூட்டாதரவை வழங்கிக் கொண்டு மீட்பு அணிகளை தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படை கலங்களிற்கு பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படை பீரங்கிக் கலங்கள் மீது கடற்புலிகளால் பெரும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.
 
இதன்போது “ரணவிரு” பீரங்கி கப்பல் கடற்கரும்புலிகள் தாக்குதலினால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது.
 
விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம்.!
 
 
 
 
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...

Recent Comments