இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home கரும்புலிகள் கடற்கரும்புலிகள் கடற்கரும்புலி மேஜர் அறிவுச்செல்வன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி மேஜர் அறிவுச்செல்வன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி மேஜர் அறிவுச்செல்வன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்
01.05.2002 அன்று தமிழீழ கடற்பரப்பில் ஏற்ப்பட்ட நடைவடிக்கை ஒன்றின்போது வீரச்சாவை தழுவிகொண்ட கடற்கரும்புலிகள் மேஜர் அறிவுச்செல்வன் , மேஜர் சூரியன் ,மேஜர் அச்சுதன் மற்றும் மேஜர் பாண்டியன் அவர்களின் 19 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
சமாதான காலஆரம்பப் பகுதியில் தலைவர் அவர்களின் நீண்டகால செயற்திட்டத்திற்கமைவாக தென்தமிழீழத்திற்கான விநியோகத்திட்டமும் மாற்றப்பட்டு அதற்கானஅறிவுறுத்தல்களும் ஆலோசனைகளும் கடற்புலிகளுக்கும் சர்வதேச கடற்பரப்பிலிலுள்ளவர்களுக்கும் வழங்கப்படுகிறது. அதற்கமைவாக இதுவரை காலமும் ஆழ்கடல் விநியோகம் ஒருபகுதியாக செயற்பட்டுக் கொண்டிருந்தது .ஆனால் இம்முறை அதாவது தென்தமிழீழவிநியேகத்திற்காக இரண்டு கப்பல்களும் பயண்படுத்தப்பட்டன. இரண்டு பிரிவுகளாக இடம்பெறுவதற்கான அனைத்துப் பணிகளிலும் தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் அணிகள் பிரிக்கப்பட்டு தென்தமிழீழத்திற்க்கு அனுப்பப்பட்டன.ஆனால் இவ் ஆழ்கடல் விநியோகம் முற்றிலும் மாறுபட்டது முதலாவதாக றோலர் கொள்வனவு செய்யப்பட்டு அவ்றோலரில் கப்பல்சென்று பொருட்களை நேரடியாக தென்தமிழீழத்தில் இறக்குவது .இரண்டாவதாக இவ்விநியோகம் முற்றிலும் கடற்கரும்புலிகளை உள்ளடக்கியதாகும்.
 
றோலரில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருக்கும்.கடற்படையினர் சோதனை செய்யமுற்பட்டால் அல்லது மறித்தால் நிலைமையைப் பார்த்து அவ்றோலருடன் விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் கடற்கரும்புலிகள் றோலரைத் தகர்த்து தாமும் வீரச்சாவடைவார்கள்.அந்தவகையில் நீண்டகாலமாக இவ் தென்தமிழீழ விநியோக நடவடிக்கையில் திறம்பட செயற்பட்ட கடற்கரும்புலிகள் கப்பலுக்குச் சென்று பொருட்களை ஏற்றிக்கொண்டு வரும்போது சீரற்ற காலநிலை மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக வரும் நாளுக்குத் தாமதமாக இரண்டு நாட்கள் தாமதித்து வந்ததாலும் இவர்கள் வந்த நாள் மேதினம் என்பதால் கடலில் எந்த மீன்பிடிப் படகுகளும் இல்லாததால் இவர்களின் றோலரை சோதனை செய்ய முற்பட்ட கடற்படையினருடன் தங்களது இயந்திரம் பழுதடைந்ததால் வருவதற்க்கு பிந்தி விட்டது என கதைத்துக் கொண்டிருந்தனர் .அந்தக் காலப்பகுதி சமாதானம் என்பதால் இவர்கள் தங்களது கட்டளைமையத்திற்க்கும் தகவல்களை அறிவித்திருந்தார்கள்.
 
இருந்தும் கடற்படையினர் இவர்களை திருகோணமலைத் துறைமுகத்திற்க்கு வருமாறு அறிவுறுத்தி அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது எதிரியிடம் பிடிபடக்கூடாதென்பதற்காகவும் இரகசியத்தைக் காப்பதற்காகவும் தங்களது ரோலரை வெடிக்கவைத்து தென்தமிழீழக்கடலில் 01.05.2002 அன்று ஒரு புதிய வரலாற்றைப் பதித்துச் சென்றார்கள். இச் சம்பவத்தில் …
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments