கடற்கரும்புலி கப்டன் பாலன் வீரவணக்க நாள் இன்றாகும்.
மட்டக்களப்பிலிருந்து வன்னி {முல்லைத்தீவு} நோக்கி கடல் வழியான நடவடிக்கையின் போது திருகோணமலை கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தைத் தொடர்ந்து நீந்தி கரை சேர்ந்த நிலையில் துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு சிறிலங்கா படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்திருந்தவேளை தனது நாவினை பற்களால் தறித்து மயக்கமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் அங்கிருந்த கட்டிலில் தலையினை தொடர்ச்சியாக மோதி 28.06.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் பாலன் எனும் கடற்கரும்புலி மாவீரரின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயும்
வன்னி நோக்கி கடல் வழியான நடவடிக்கை சம்பவத்தில்……!
கப்டன் தும்பன் (இளையதம்பி லிங்கேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் மேனகன் (குலவீரசுந்தரம் குலசேகரம் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் உத்தமன் (பொன்னுத்துரை அருமைத்துரை – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சுந்தரவதனி (கதிர்காமர் ஜெயவதனி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் ஆதனா (செல்வரத்தினம் சந்திரமலர் – ஜெயபுரம், கிளிநொச்சி)
வீரவேங்கை ஆபனா (தேவரத்தினம் சந்திரமலர் – ஜெயபுரம் கிளிநொச்சி)
கடற்கரும்புலி கப்டன் பாலன் நீளும் நினைவுகள்.!.
யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”