முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் காங்கேசன்துறை கடற்பரப்பில் 16.08.1994 அன்று தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் A 516 கட்டளைக் கண்காணிப்புக் கப்பல் மற்றும் டோறா பீரங்கிப் கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
எட்டரை மணிநேரத்தில் சுமார் 35 கி.மீட்டர்கள் தூரத்தை நீந்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்த கப்டன் அங்கயற்கண்ணி சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் தாக்கி மூழ்கடித்து கடலன்னை மடியில் வரலாறாகி உறங்குகின்றார்.
தாயக விடுதலை கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் உயிராயுதம்
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக்
காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”