கடற்கரும்புலி மேஜர் கண்ணாளன், கடற்கரும்புலி மேஜர் நகுலன் வீரவணக்க நாள் இன்றாகும்.
03.09.1995 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் அதிவேக “டோறா” பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி மேஜர் கண்ணாளன், கடற்கரும்புலி மேஜர் நகுலன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதங்கள் .!
கடற்கரும்புலி மேஜர் கண்ணாளன், கடற்கரும்புலி மேஜர் நகுலன் நீளும் நினைவுகள்
பண்டாரவன்னியன் பொற்கால்கள் களையாற நடந்த கரையோரக் கடலில் கரும்புலித் தாக்குதல்.!
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”