இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன், கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் 04.05.1991 அன்று சிறிலங்காக் கடற்படையின் கட்டளைக் கப்பலான “அபிதா” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன், கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடலில் 1991 வைகாசி 4ம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன் ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம்.

 

1988 – 1989 ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர, உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார்.
இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன் விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்கா படைகளுக்கு பெரும் அச்சமும் சேதமும் ஏற்படுகிறது என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் அவர்களின் பெயரில் தமிழீழ போரியல் வரலாற்றில் “ஜெயந்தன் படையணியாக” தடை எனும் பகை மோதி பல களங்களில் வியக்கத்தக்க சாதனைகள் படைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.!

11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...

கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.!

நெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...

தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…

“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...

Recent Comments