அதோ! அவர்கள் யாரென தெரிகிறதா
தெரியவில்லையா தென்றலே
இருளினுள் பிறந்து
ஒளியைத் தேடி போராடும் பூக்கள்
பூவுக்குக்குள் புயல் உண்டென உணர்த்தியவர்கள்
இருளில் ஒழிந்த சுதந்திரத்தை பெற
ஆசைகளனைத்தையும் துறந்த அக்கனி பூக்கள்.
புயலை எதிர்த்து இவர்கள்
நீற்பது துரும்பாகவல்ல
இரும்பாய் மலர.
தூங்கா விழியுடன் காத்திருப்பது
அவர்கள் போகும் பாதையில்
பூப்பது பூக்கள் அல்ல பூகம்பங்கள்
அவர்கள் வாசிப்பது காற்றை அல்ல
நெருப்பை .
அவர்களின் பயணத்தின் முடிவு
தமிழரின் சுதந்திர விடிவு
இறவாப் புகழுடன்
புதைவார்கள்
மறவாத மனிதராய்
நெஞ்சீல் வாழ்வார்கள்
அவர்கள் தான்
கம் தேசத்தின் காவலர்கள்.
-கவியாக்கம்:- க.டே.கிஸ்காட்
சூரியப்புதல்வர்கள் 1999
மாவீரர் நாள் சிறப்பு பதிவிலிருந்து வேர்கள்.!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”