இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home அடிக்கற்கள் மேஜர் கணேஷ்

மேஜர் கணேஷ்

 

மேஜர் கணேஸ்(மூதூர் பிராந்திய தளபதி)

சித்திரவேல்  சிற்றம்பலம்

பேராறு, கந்தளாய், திருகோணமலை.

வீரப்பிறப்பு:09.04.1961

வீரச்சாவு:05.11.1986

நிகழ்வு:திருகோணமலை திருமலை மூதூரில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவு


ஒரு மலையின் சரிவு!

27 வருடங்களுக்கு முன்னர் கிழக்கின் வீரஞ்செறிந்த குளக்கோட்ட மாமன்னன் அரசுசெய்த கந்தளாய் பகுதியில் இருந்து வடக்கே தோன்றிய தீப்பிழம்பான பிரபாகரனை வந்தடைந்து தமிழீழம் முழுவதும் விடுதலைப்புலிகள் என்னும் வீரமறவரை, மரபை எடுத்து சென்றவன்…
நெருப்பு பறக்கும் கண்கள்,தடித்து உதடுகளின் மேல் வீரத்தோடும் ஆண்மையோடும் துடிக்கும் அடர்ந்த மீசை,பரந்த மார்புகள்,விரிந்த தோள்கள்…
அவன்தான்…

மேஜர் கணேஷ்
தமிழ் மக்களின் சுதந்திரத்திற்க்கான ஆயுதப்போராட்டம் இன்று பலராலும் பலவகைகளில் விமர்சிக்கப்படுகின்றது. ஸ்ரீ லங்காவை ஆண்ட சிங்கள அரசுகளும் சிங்கள பேரினவாதிகளும்தமிழ் மக்களை ஒரு சுதந்திரமானகௌரவமான இனமாக கருதாமல் அவர்களை அடிமைகளாக இரண்டாம்தர பிரஜைகளாக நடாத்த முற்ப்பட்டதன் விளைவாகவே ஆயுதப்போராட்டம் தோற்றம்
பெற்றது.
சிங்களத்தின் அடாவடித்தனங்களாலேயே நாங்கள் ஆயுதம் எந்த வற்புறுத்தப்பட்டோம் என்ற உண்மையை புலிகளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தி வந்தனர்.
புலிகளதும் தமிழ் மக்களதும் பக்க நியாயங்களை ஏற்க்க மறுத்த சிங்களமும் ,சர்வதேசமும் ஒன்றிணைந்து ஆயுதப்போரட்டத்தை இன்று பலமிழக்க செய்துள்ளனர் .
ஆயுதப்போராட்டம் இல்லாத நிலையில் தமிழ் மக்களிற்கு எதிராக சிங்களம் இன்று மேற்கொள்ளும் அடாவடிகள் போலத்தான் சுதந்திரத்திற்கு பிற்ப்பட்ட காலப்பகுதிகளிலும் சிங்களம் தமிழ் மக்களிற்கு எதிராக தனது அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தது . இந்த அராஜகங்களை கண்டு பொறுக்கமுடியாமல் போராடப்புறப்பட்ட ஒரு புலி வீரன் தான் மேஜர் கணேஷ் .
தமிழ் மக்களிற்கு ஆயுதப்போரட்டத்தின் முலமே ஒரு கௌரவமான வாழ்வை இலங்கையில் அமைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் தமிழீழ பிரதேசங்கள் எங்கும் போர்ப்பரணி பாடிய அத்தமிழ் வீரனின் 26ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் . அம் மாவீரனின் நினைவாக விடுதலைப்புலிகள் ஏட்டில்வெளிவந்த நினைவுக்குறிப்பு .

அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும் மேயர் கணேஷ் தமிழ் ஈழ விடுதலைப் போர்வரலாற்றில் மேனி சிலிர்க்க வைக்கும் ஒரு அத்தியாயம் ஆகிவிட்டான் பெருத்த மீசை தடித்த உதடுகள் பருத்த மார்பு களத்தில் வெடித்த எரிமலையாய் உலா வந்தவன் கணேஷ் .
மூதூர் ஆறுகளால் துண்டுதுண்டாகி புவியியல் நிலையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நிலப்பரப்பு .கொலை வெறிச் சிங்களவரின் குடியேற்றப்பகுதி . இஸ்லாமியத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்கள் வாழ்வையே சூறையாடும் முஸ்லிம் ஊர்காவல் வெறிப்படையின் இருண்ட கூடாரம். 9 இராணுவ முகாம்களாலும் 3 அதிரடி காவல் நிலையங்களாலும் வளைக்கப்பட்ட தமிழீழத்தி் முள் வேலிப்பகுதி.அங்கேதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை வித்திட்டு வளர்த்தவன் கணேஷ் .

1981 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புலிகள் இயக்கத்தில் சேர்ந்தபோது அவனுக்கு வயது 20 தான் .ஆனால் அப்போதே அவன் கண்களில் நெருப்பின் அலை பொங்கிற்று .
ஒன்றாய் படித்த காலத்தில் ஆசிர் சீலனோடு சேர்ந்து வளர்த்துக்கொண்ட விடுதலை உணர்வுகள் ஆழப் பதிந்திருந்தன . தளபதி சீலனுக்குப் பக்கத்தில் அவன் ஒரு வீரனாய் களத்தில் நின்ற காலம் உண்டு .
அந்த நாட்கள் கணேசின் வாழ்க்கையில் அவன் பாடம் கற்ற நாட்களாகும் .மீசாலை முற்றுகையில் தளபதி சீலன் மீளாத் துயில் கொண்ட நிகழ்ச்சி கணேஷ் நெஞ்சில் மின்னலின் கொடிய வீச்சாயிற்று .தன் பள்ளிக்கூட நண்பனின் அந்தப் பெரிய சாவை அவன் என்றும் மறந்ததில்லை .
நெல்லியடியில்தான் அவனுடைய முதல் களப்போர் 02.07.1982 அன்று ரோந்துப் போலிஸ் படையினரைச் சாகடித்து வீறு கொண்ட தன் போராட்ட வரலாற்றின் முதல் அத்தியாயத்தை எழுதினான் ஒப்பிலாத அந்த மாவீரன் தொடந்து கண்ட களங்கள் ஒன்றா? இரண்டா ?

 

சாவகச்சேரி போலீஸ் நிலையத் தாக்குதல் ,உமையாள்புரம் இராணுவ வாகனங்கள் மீதானஅதிரடி ,13 இராணுவ வெறியர்களை முதன்முறை பலிகொண்ட திருநெல்வேலி வரலாற்றுப்போர் , களுவாஞ்சிக்குடிபோலீஸ் நிலையத் தாக்குதல் ,திருக்கோவிலில் வைத்து துரோகி ஒருவன்மீதான துப்பாக்கிப் பிரயோகம் , ஈச்சலம்பத்தை முற்றுகை தகர்ப்பு ,கட்டைப்பறிச்சான் கண்ணிவெடித் தாக்குதல் ,பாலம்பட்டாறு இராணுவ மோதல், புலிகளின் வரலாற்றின் முதன்முதல் இராணுவத்தின் L .M .G வகைத் துப்பாக்கியை கைப்பற்றிய பட்டித்திடல் கவசவண்டித் தகர்ப்பு , இறால்குழி சுற்றிவளைப்பு மீறல்போர் ,3 ஆம் கொலனி இராணுவ நேரடிமோதல் ,வாகரை கண்ணிவெடி அதிரடித்தாக்குதல் , தெகிவத்தை போலிஸ் கொமாண்டோக்கள் கடத்திச்சென்று நடுக்காட்டில் வைத்து கற்பழிக்க முயன்ற தமிழ் பெண்களை மீட்டெடுத்த தீரப்போர் ,எமது விடுதலை வரலாற்றில் முதல்தடவை சிங்கள விமானப்படையின் கெலிகொப்டர் சுட்டு வீழ்த்திய கூனித்தீவு முற்றுகையுடைப்பு ,சம்பூர் யுத்தம் , வெருகல் விடுதலைப்புலிகளின் முகாம் வளைப்பு முயற்ச்சி முறியடிப்பு ஆம் …..
கணேஷ் புகழின் எல்லைகடந்த மாவீரன் தமிழீழத்தின் வடக்கெல்லைக் கிராமங்களில் ஒன்றான காரைநகர் தொடக்கம் தெற்கெல்லைக் கிராமங்களில் ஒன்றான திருக்கோவில் வரை களங்கள் பார்த்த கணேஷ்தமிழீழம் முழுவதையும் தன்இரண்டு கால்களால் அளந்தான் .யாழ்ப்பாணம் ,மன்னார் ,வவுனியா ,திருகோணமலை , அம்பாறை என்று நீண்டு கிடந்த தமிழீழத்தை எத்தனை ஆறுகள், உப்பேரிகள் ,கடல் நீரோடைகள் இடை நின்று பிரித்தலும் ஒற்றைப் பாலமாய் அத்தனை இடைவெளிகளிலும் நிரப்பித் தமிழீழத்தை இணைத்து நின்ற அவன் செயல் வடக்குக்கும் ,கிழக்குக்கும் வேலி போட நினைப்போருக்கு வரலாறு கொடுத்த சரியான அடியாகும் . கந்தளாய் என்னும் கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த கணேஷ் ஆடம்பரம் இல்லாதவனாய் எளிமையானவனாகவே கடைசிவரை வாழ்ந்தான்.

 

புலிகள் அவனை விரும்பினார்கள் என்று சொல்வதைவிட அவனைப் போலவே இருக்க விரும்பினார்கள் என்பதே பொருத்தமானது . கூனித் தவின் அழகான உப்பாற்றுக்கரையில் புலிகள் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து மகிழ மகிழ பேசுவார்களே . வெருகல் மண்ணுக்குப் பச்சை வண்ணம் பூசும் வயல்களில் புலிகளின் கைகளைப்பற்றியபடியே சிரிக்கச் சிரிக்கப்பேசி அவன் உலா வருவானே ஓ ! அந்த நாட்கள் இனிமையானவை .
இஸ்லாமியர் ,இஸ்லாமியர் அல்லாதார் இடையே மதக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழினத்தைப் பிரிக்க சிங்கள ஆட்சியாளர் முனைத்த ஒரு சந்தர்ப்பத்தில் கலவரத்தை நிறுத்த மூதூர் நகருக்குப் பிரஜைகள் குழுவை அனுப்பினான் கணேஷ் . அக்குழுவை கூலிப்படையினர் கைது செய்தபோது போராடி அவர்களை அவன் மீட்ட களப்போர் இன்னுமொரு மயிர் சிலிர்க்கும் வரலாற்று நிகழ்வே. புலிகளுக்குப் பக்கத்தில் மட்டுமல்ல , மக்களுக்குப் பக்கத்திலும் அவன் நெருக்கமாகவே நின்றான்.
சாவு அந்தமாவீரனைச் சந்தித்த நாள் கொடுமையானது .திருகோணமலை மாவட்டத்திலுள்ள பெரியபாலம் என்ற இடத்தில் 05 .11 .1986அன்று 4 மணியளவில் நிகழ்ந்த இராணுவத்தின் சுற்றிவளைப்பி் மேஜர் கணேஷ் நெருப்பின் நடுவில் 5 ஆண்டுகள் நின்று விளையாடிய விடுதலைபுலி நேர்நின்ற எதிரிகளை மோதி நிமிர்ந்த தலையோடு மரணத்தை ஏற்றுக்கொண்டான்
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மாபெரும் துப்பாக்கிகளில் ஒன்று மெளனத்தை தழுவிற்று.

 

ஓ ….. கணேஸ்!…..
நீ போய்விட்டாயா ? இல்லை ….!
அகதி முகாமில் இருந்து உன் தாய் ஆசையோடு உனக்கென்று சமைத்துக் கொடுத்த சோற்றுப் பொட்டலத்தோடு, உன் தந்தை பயந்து பயந்து உன்னைக் காண வருவாரே….
அந்த சோற்றுப் பொதியை அவிழ்த்து வைத்து ஒவ்வொரு பிடியாய் வைத்து நீ புலிகள் வாயில் ஆசையோடு ஊட்டுவாயே !
நீ ஊட்டிய சோறு எங்கள் உடம்பில் இரத்தமாகி விட்டதையா.
நடக்கிறோம்…..
அதே உப்பாற்றங்க்கரை …. அதே வயல்வெளிகள் ….
அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும் மேயர் கணேஷ் தமிழ் ஈழ விடுதலைப் போர்வரலாற்றில் மேனி சிலிர்க்க வைக்கும் ஒரு அத்தியாயம் ஆகிவிட்டான்.

– விடுதலைப்புலிகள் இதழ் 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...

Recent Comments