போர்முனைக்கு பொருட்களை எடுத்துவந்தன. தோளில் மூங்கில்த்தடி துலாக்கள் மூலம் மக்கள் பொருட்களைக் கொண்டு சென்றனர். போரின்போது எதிரியின் குண்டுகளுக்கு மத்தியில் மக்கள்படை, சமையல், மருத்துவப்பணி, போக்குவரத்து போன்ற சகல பணிகளையும் செய்தது’
“மக்கள் போரின் இராணுவக்கலை” என்ற நூலில் வியட்நாம் விடுதலை அமைப்பின் இராணுவ தளபதி ஜெனரல் கியாப்.
லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கரகுவா விடுதலைப் போராட்டம், மக்கள் எழுச்சிக்கு சிறந்த உதாரணம். சன்டினிஸ்டா போராளிகள் விடுதலைப் போரை உச்சநிலைக்குக் கொண்டு வந்த போது, இருந்த மக்கள் படையே வெற்றி இலக்கை விரைந்து எட்ட உதவியது.
சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா, தென்னாப்பிரிக்கா உட்பட விடுதலைப் போர்களை வென்ற உலக நாடுகள் மக்கள் படையின் பங்களிப்புடனேயே வெற்றி பெற்றன.
மக்கள் எழுச்சி இந்தத் தேசங்களில் உயர்நிலைக்கு வந்தமைக்கு அந்த மக்களிடையே ஒட்டுமொத்தமாக ஏற்பட்ட தேசிய உணர்வே காரணமாகும். சீனாவில் மாவோ, கொம்யூனிஸ புரட்சியை முன்னெடுத்தபோது, அங்கு பெரும்பான்மையாக இருந்த மக்களிடம் நீ ஒரு சீனன் என்ற தேசிய கருத்துருவை வளர்த்ததன் மூலமே மக்கள் எழுச்சியை ஏற்படுத்தினார்.
அந்த வகையான ‘தமிழர்’ என்ற தேசிய உணர்வு, தமிழரிடம் இருக்கின்றது. ஆனால், அதனை சிதைப்பதில் சிறிலங்கா அரசு கல்வியை ஒரு பிரதான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது.
சிறீலங்காவின் கல்வி, சிங்களத் தேசியத்தை சிங்கள தேசத்தை அதன் பண்பாடு, புவியியல் நிலங்களை சித்தரிப்பது. அதனையே தமிழரிடம் திணிக்கின்றது. தமிழர் தம் சுயத்தை, தம் சூழலை, தம் வளத்தை அறியவோ வளம்படுத்தவோ விடாமல் கல்வியை சிங்கள தேசியத்தை மையப்படுத்தியதாக சிங்கள அரசு அமைத்துள்ளது. இக்கல்வி எமக்கான சுயசார்புத் தன்மையை வளர்க்க அனுமதிக்கவில்லை. பதிலாக அரசை மையமாகக் கொண்ட உத்தியோகத்தை இலக்கமாகக் கொண்டது. இந்த இலக்கை எட்டுவதே ஒவ்வொரு தமிழனின் குறிக்கோளாக இருக்க வேண்டும் அரசின் நோக்கம்.
இதன்மூலம் உத்தியோகம் அரசுக்கான விசுவாசத்தை வளர்க்க உதவுகின்றது. நில ஆக்கிரமிப்புடன் இதனையும் கருத்தில் வைத்து யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து தமிழர்களை தம் படையினரின் பிரதேசத்துள் உள்வாங்கி அவர்களின் நோக்கினை திசை திருப்புவதில் அரசு முனைப்போடு செயல்பட்டு வருகின்றது. இராணுவத்தினரின் மூலமாக சிங்கள அரசு மேற்கொள்ளும் இத்தந்திரோபாயத்தை உடைக்கவேண்டிய ஒட்டுமொத்த தேவை தமிழினத்திற்கு எழுந்துள்ளது. தமிழ் மக்களை கையகப்படுத்திய யாழ் குடாநாட்டில் இராணுவத்தின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது. இது இனிமேல் ஆக்கிரமிக்கப்பட்ட பிறபகுதிகளிலும் தொடரும்.
இதனால் ஆக்கிரமிக்கப்படாத பகுதிகளில் இருப்போர் அப்பகுதியை தக்கவைப்பதும், ஆக்கிரமிக்கப்பட்டவற்றை மீட்பதும் தமிழீழ மக்களின் உயிர்க்கடமையாகின்றது.
இதனைச் செய்யப்போகின்ற பெரும் பொறுப்பு கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மக்களுக்கானது. இதிலிருந்து வழுவுவது தமிழருக்குரிய காரியமாக இருக்காது.
அதேபோல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கும் தேசியக் கடமை இருக்கின்றது. தமிழருக்கு நாடு அமைய அவர்கள் தம் தேசிய உணர்வை மறக்கக்கூடாது.
இன்று உலகெங்கும் தமிழர் சிதறி வாழ்கின்றனர், உலகம் முழுவதும் தமிழர் வாழ்கின்றனர் என்பது பெருமைக்குரிய விடயமாக இருக்காது. 2ஆம் உலகப்போர் வரை உலகெங்கும் சிதறி வாழ்ந்த யூத இனம் கல்வியிலும் ஏனைய துறைகளிலும் உயர்ந்து நின்றபோதும், தமக்கு என்ற தாயகம் இல்லாது ஏனைய நாடுகளில் அடிமையாக வாழ்வது அவர்களைப் பாதித்தது. தமக்கென ஒரு நாடு வேண்டும் என்பதை அவர்கள் பெருமைக்குரிய விடயமாகக் கருதினர். அதற்காக உழைத்தனர். அதே போல் இன்று சிறிலங்கா அரசின் ஆதிக்கமே தமிழர்களைச் சிதறடித்து ‘அகதிகள்’ என்ற பெயரில் சுயமானமிழந்து வாழவைக்கின்றது. இது நிரந்தரமானதல்ல, நிரந்தரமாக இருக்கவும் கூடாது. ஆனால், அவர்களும் தாயகத்திற்கான உழைப்பை அதிகரிக்கவேண்டும்.
வியட்நாமியர்களைப்போல, யூதர்களைப்போல, குர்தீஸ்களைப்போல ஒவ்வொரு ஈழத்தமிழரும் தன் தாயக உருவாக்கத்திற்கு எந்தவகையிலாவது உழைக்கவேண்டிய தருணம் இது.(முதல் இணைய தட்டச்சு உரிமை:-வேர்கள்)
யூதர்களுக்கு மஸாடாவைப்போல தமிழ் மக்களுக்கு வன்னி.
‘மஸாடா இனி என்றும் வீழாது’ என ஒவ்வொரு யூதனும் மஸாடா சென்று உறுதி எடுத்துக்கொள்வது இஸ்ரேலின் வழமை.
அதேபோல தமிழீழத்தின் ஒவ்வொரு பிரஜையும் உறுதியெடுக்க வேண்டிய நிலை. காலதாமதம் இன அழிவை மிக மோசமாக்கிவிடும். எந்த வகையிலும் தமிழீழத்தின் ஒவ்வொரு மகனும் எங்கிருந்தாலும் தாயகத்தைத் தக்கவைக்க வேண்டும்.
இன்று தாயகத்தில் தமிழ்த்தேசிய எழுச்சி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த தழிழினமும் பல்வேறு மாற்றங்களை தமது இயல்புப்போக்கில் மாற்ற வேண்டிய தேவைகள் ஏற்பட்டுள்ளன.
ஆக்கம் -தி.தவபாலன்
ஓகஸ்டு 2001 எரிமலை இதழில்