இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home கரும்புலி கரும்புலிகள் எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்.!

எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்.!

“நீங்கள் முன்னால் போங்கோ. நான் பின்னால் வருவேன்”

கரும்புலியாக செல்லுகின்ற கரும்புலிவீரர்களுக்கு, தலைவர் அவர்கள் கடைசியாக இப்படிச் சொல்லித்தான் வழியனுப்பி வைப்பார்.

இது வெறுமனே அவரது வாயில் இருந்து வருகின்ற வார்த்தை அல்ல. அந்த மாபெரும் தலைவரின்ஆத்மாவில் இருந்து எழும் குரல் அது.

“உண்மையிலே என்;றோ ஒருநாள் இதுதான் நடக்கும்” என்று உறுதியோடு தன்னுள் சொல்லி நிற்பவர் எம் தலைவர்.  கரும்புலி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளச் செல்கின்ற எங்கள் தேசத்தின் குழந்தைகள் அதற்கு போவதற்கு முன்னதாக ஒரு நாளில், தலைவர் தனது பொழுதுகளை அவர்களுடன் கழிப்பார். இதனை அவர் எப்போதும் செய்வதுண்டு.

கரும்புலியாக செல்பவர்கள் தமது மனம் திறந்து பழகுவார்கள். எல்லாவற்றையும் பற்றி கதைப்பார்கள். பகிடிகள் சொல்லிச் சொல்லிச் சிரித்து மகிழ்வார்கள். தலைவரோடு ஒன்றாக இருந்து உணவருந்துவார்கள். அவரோடு சேர்ந்து நின்று படமெடுப்பார்கள். தங்களது உள்ளக்கிடக்கைகளை எல்லாம் – உணர்வுகனை எல்லாம் பகிர்ந்து கொள்வார்கள்.

கடைசியில் தலைவரிடமிருந்து அவர்கள் விடை பெறுகின்ற போது சோகம் கலந்த பெருமிதத்தோடு அவர்களை கட்டியணைத்து வழியணுப்பி வைக்கையில், அந்தத் தலைவனின் குரல் உறுதியோடு ஒலிக்கும்.

” நீங்கள் முன்னால போங்கோ, நான் பின்னால வருவன் “

வெளியீடு – உயிராயுதம் பாகம் 1

மீள் வெளியீடு :வேர்கள் இணையம் 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...

Recent Comments