இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தியாக தீபம் திலீபன் எங்கள் முற்றத்தில் விடுதலை சீட்டென..!

எங்கள் முற்றத்தில் விடுதலை சீட்டென..!

அகிம்சை எனும் உயரிய ஒழுக்கத்தின்பால் இயங்குவதாக காட்டிக்கொண்டிருந்த இந்தியா  தனது கோரமுகத்தைக் காட்டியது. நல்லூரில் 15.09.1987 அன்று ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தான். ஒரு துளி நீர் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் அந்த தியாக வேள்வியில் மெழுகாய் உருகினான்.  அவன் நேசித்த மக்கள் அலையலையாய் அவன் முன் திரண்டார்கள். அவன் மெல்ல மெல்ல உருகி அணைந்து கொண்டு போவதைக்கண்டு துடித்தார்கள். அந்த மக்களின் துடிப்பைக் கண்டு அவனால் பேச முடியாத நிலையிலும் பேசவேண்டும் என்கிற துடிப்போடு அவன் பேசுகையில்……………….
 
“நான் இறந்து விண்ணிலிருந்து அங்கே உள்ள என் நண்பர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலரப்போகும் அந்த நாளை எதிர் பார்த்துக்கொண்டேயிருப்பேன்.” என்று கூறினான். அத்தகைய நம்பிக்கையோடு பயணித்துவிட்ட அந்த வீரர்களின் நம்பிக்கை ஒருபொழுதும் தோற்றுவிடாது. பரிபூரண சுதந்திரத்தை எமது மக்கள் அடைந்தே தீருவார்கள். திலீபன் போன்றவர்கள் மிக அருமையானவர்களே.
 
“ஒரு புனித இலட்சியம் நிறைவேரவேனும் எண்பதற்காகத் தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறோம்.” எனத் திலீபன் நல்லூரில் உண்ணாவிரத மேடையில், அவனோடு கூட இருந்த கவிஞர் வாஞ்சிநாதன் நீர் அருந்தக் கேட்டபோது அவரிடம் இவ்வாறு கூறினான்.
 
எமது விடுதலைப் பயணம் அப்படிப்பட்டதுதான், எம்மை மிகக் கடுமையாக வருத்தித்தான் அந்த உயரிய விடுதலையை வென்றெடுக்க முடியும். அதுவே பெறுமதி மிக்கதாயிருக்கும் என்பதை அவனது வாழ்க்கை எமக்கு உணர்த்துகிறது.
 
எந்த நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் அவனது இயல்பு பாரதியார் கண்ட சிட்டுக்குருவியை எண்ணவைக்கும். அத்துணை துடிப்பு, வேகத்துடன் விசையுறத்திரிந்தான். இந்த வேகமும் துடிப்பும் எம் ஒவ்வொருவரிலும் ஆளவேண்டும். அத்தகைய வீரனின் நினைவில் நனைவோம்.
 
– எரிமலை (புரட்டாசி 1994) இதழிலிருந்து வேர்கள் .
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments