நீர் கொண்டு போகும் நீருள் மேகமே
நீவந்து நீர் சொரிந்து போகாயோ
நிலவேடு விாைபாடும் விண்மன் கூட்டமே
நிலம் வந்து ஒயேற்ற மாட்டீரே
ஊரையே உசுப்பும் ஊழிக் காற்றே
ஒரு முறையேனும் உறங்கிவிடு
மண்முடி எம் மாவீரர் துயில்கிறார்
மறுபடி மெளனம் காத்துவிடு
பாலையும் வேம்புமே பனியில் நடுங்கும்
பங்குனி குளிரில் காத்திருந்தார்
ஆந்தையும் வெளவாலும் அயர்ந்துறங்கினாலும்
அனல் விழி நிறந்திருந்தார்
வெயிலேறிப் போய் விழியெரிந்தாலும்
இமைமூட இவர் மறந்தார்
விடுதலை வேள்வியில் வில்லொடிந்தாலும்
நடு நெஞ்சில் நாண் ஏற்றார்
விடிவெள்ளி மட்டும் விழித்திருக்க
வெடிகொண்டு படகேறினார்
கொடி முல்லையெல்லாம் குலுங்கியழ
நொடிப் பொழுதில் உயிரேகினார்
கடற்புலியாகி காலனும் அதிர்
கடலினில் உயிர் சிதைத்தார்
கருவேங்கையாகி களமாடி நின்று
கற்றினில் உயிர் விதைத்தார்.
அங்குலத் துண்டாய் அன்னைமண் காத்தவர்
ஆறடி மண்ணனில் அடக்கமோ
கனவிலும் எதிரியை கலங்க வைத்தார்
காற்று வெளியில் அடக்கமோ
நீரிலும் தீமூட்டி நீறாகிப் போனவர்
நீலக் கடல் மடி அடக்கமோ
அழுதிடும் கண்களை ஆற்றிவிடு
அயிரம் நெய்விளக்கு ஏற்றிவிடு!
-கவியாக்கம்:- சோதியா நோர்வே
சூரியப்புதல்வர்கள்
மாவீரர் நாள் சிறப்பு பதிவிலிருந்து வேர்கள்.!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”