இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home எரிமலை இதழிலிருந்து உயிர் ஒன்று மெய் இரண்டு .!

உயிர் ஒன்று மெய் இரண்டு .!

கார்வண்ணன் வவுனியாவில் வீரச்சாவு ,அரசவானொலி அன்று பகலே முன்
உணரவைத்த ஊகம் எமது தொடர்புசாதனத்தினுாடும் உறுதியாகிப்போனது
 
 
‘கார் இன் பணியின் தாக்கம்………
அவனது சாவின் காரணி ——–அவையல்ல
இங்கு பேசுபொருள் வேறொன்று, சோகம்,பாசம், அந்தரம், பரிதவிப்பு, ஆறுதல்,
தேறுதல் ஆக உணர்வுகளின் சங்கமம்.
 
 
ஒரு பெயரில் பலர் இருப்பது ஒன்றும்புதினமல்ல, இருப்பினும் எம்மில்
புலனாய்வுத்துறையில் பலரில் இவர்கள் இருவருக்கும் மட்டும் பெயர் கார்வண்ணன். செல்லமாக ‘கார்இரண்டு கார்வண்ணனும் வெவ்வேறு
பணியாக ஒரே பணிக்களத்தில் ஒரே நாட்களில் வவுனியாவில், நாமே உணராது
வந்தமைந்து பொருந்திய நிலமையிது.
 
இருவரினதும் மூத்த சகோதரர்கள் இயக்க உறுப்பினர்கள். அவர்கள் இருவரும்
இங்கு போர்க்கத்தில். போர்க்களமருத்துவப் பணியில் மருத்துவர்களாக,
எப்போதும் எவராலும் திட்டமிட்டு தீர்மானிக்கப்படாமலேயே ஒன்றன் மேல்
ஒன்றாய் வந்தமைந்த பொருத்தங்கள்இயற்கை தன்பாட்டில் அமைத்ததோ? இந்த வினோதப் பொருத்தங்கள்.
 
 
வீரச்சாவு கார்வண்ணாம்……
டொக்டரின் தம்பியாம்…….. செய்தி பரவி,
தமையன்மார் காதிலும் எட்டியது.என்னதான் இயக்கம் என்ற போதும்
என்னதான் போர்க்கள வைத்தியர்கள் என்ற போதும்……உயிர் வாழ்வுக்கும் சாவுக்கும்இடையேயான கணங்களை கண்டும்.கணக்கிட்டும் பழபகியவர்தான் என்றபோதும்  இது தம்பியல்லவா என் தாயின்வயிற்றிலேயே உதித்த இரத்த உறவல்லவா.
 
முதலில் மற்ற கார்வண்ணனின் தமையன் வந்து விபரம் கேட்க வீரச்சாவு
உங்கள் தம்பியில்லை அது “மற்ற டொக்ரரின் தம்பி” பதில் “என் தம்பி வவுனியாவில் தான்நி ற்கின்றான் “வீரச்சாவு யார்? ஆள் பற்றி குறிப்புகள் சரியா? தவறா?
ஆய்வு:என் தம்பி இல்லையென்றால் என்நண்பனின் தம்பியல்லவா? என் தம்பி
இல்லையென்று ஆறுதலா? என் நண்பனின் தம்பியென்று அழுகையா?
முதலில் விபரம் கேட்க வந்த தமையனின் தம்பியல்ல என்று ஆனது .
 
இதற்கிடையில் மற்ற கார்வண்ணனின் அதாவது வீரச்சாவு அடைந்த கார்வண்ணனின் தமையனுக்கு செய்தி வரும் விபரம் பெற விரைவு:
அவருக்கும் குழப்பம் மற்ற டொக்ரரின் தம்பியா அல்லது எனது தம்பியா?
இன்னாரின் தம்பியான இந்த கார்வண்ணன்தான் வீரச்சாவு என
உறுதியாகிப் போனது.
 
“இரண்டு போராளிகள்”,
“இரண்டு வைத்தியர்கள்”
“இரண்டு கார்வண்ணன்களது தமையன்மார்”
ஆக இருவரும் சந்திப்பு.
.
“உங்கட தம்பிதான் டொக்ரர் வீரச்சாவு” உங்கட தம்பிக்கு பிரச்சினை
இல்லையாம் டொக்ரர்” ஒரே நேரத்தி ஒரே விடயம் ஆறுதல் செய்தியாகவும்,
தேற்றுதல் மொழியாகவும், மெதுவாய் ஒலித்தது. ஒன்றாய்க் கலந்து மெளனமாய்ஆனது இரண்டு கார்வண்ணன்களிடையே எல்லாமே பொருத்தம்தானா? பொருந்தாமை இல்லையா? உள்ளதே
ஒரு ‘கார் இன் அம்மா, அப்டா இங்கு
வன்னியில். மற்ற ‘கார் இன் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில்.
 
இது போன்ற விடயங்களில் யார்சொன்னது? ஏன் சொன்னது? எப்படிச்
சொன்னது என்ற எந்த புலனாய்வாலும்
கண்டறிய முடியாத தகவற் தொடர்புசெயற்படும்
 
 
வன்னியில் உள்ள அம்மா அப்பாவிற்கு செய்தி சென்றது. தங்கள் செல்வம்
வவுனியாவில் என்ற செய்தியை முன்னரேயறிந்து பதறியிருந்த நெஞ்சுகள்
வவுனியாவில் ‘கார்’ வீரச்சாவு” என்ற செய்தி கேட்டு   அதிர்ந்தன.வேர்கள்.கொம்
 
உண்மையா? பொய்யா? என்று மேலதிக தகவல் தேட இடியாய் அடுத்த செய்தி
“இயக்கத்தில் இருக்கின்ற டொக்ரரின் தம்பி கார்வண்ணாம்”
 
“ஐயோ! மகனே” என்று அலறும்
நெஞ்சில் அடுத்த செய்தி.
 
“இல்லையாம், இது வேறொரு கார்
கார்வண்ணாம்
 
“இல்லையில்லை இயக்க டொக்ரரின்
தம்பியாம்
 
“மற்ற கார்வண்ணனின் தமையனும்
இயக்கத்தில் டொக்ரர் தானாம்
 
பெற்ற வயிறு எரிதலின் அதிர்வைத் தணிக்கும் சமாளிப்பா? அல்லது
உண்மைதானா?
 
 
சர்வதேச செஞ்சிலுவைக் கடிகாரமும் சிறீலங்காவின் படைத்துறை நாட்காட்டியும்  வழமைபோல் கடமைப்படி நகர்ந்தன.
 
இங்கு கார்வண்ணனைச் சேர்ந்தோருக்கு நாட்கள்
இரக்கமில்லாததாகவும், மெதுவாகவும் நகர்ந்தன.
 
செஞ்சிலுவை தாங்கிய வாகனம் கார்வண்ணனின் புகழுடல் சுமந்து, புனிதம்
பெற்று நாம் மீட்ட எம்நிலம் தொட்டது அவனைச் சேர்ந்தோர் மத்தியில்
அவனை வழியனுப்பிய தோழர்கள் முன் ‘கார் இது வித்துடல் முன்வரிசையில்,
பதறும் மனத்துடனும்,துடிக்கும் வயிற்றுடனும் அப்பாவும் அம்மாவும்.
 
அது வன்னியில் இருந்த அம்மா, அப்பா இரண்டு கார்வண்ணனில் ஒரு கார்
வண்ணனை சுமந்து பெற்ற அம்மா அப்பா….!
-நினைவுப்பகிர்வு:- ச. பொட்டு அம்மான் அவர்கள் 
வெளியீடு :எரிமலை இதழ்
இணைய  தட்டச்சு  வெளியீடு :வேர்கள்  இணையம் 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கரும்புலி மேஜர் சதா

25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...

லெப் கேணல் பிரசாந்தன்

லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 07.07.1972 வீரச்சாவு: 25.05.1999 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு   1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை...

கரும்புலி மேஜர் குமலவன்

"ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற...

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர்  சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில்...

Recent Comments