
உனது விருப்பம் போலவே
யாராகிலும் தேற்றுதல் கூடும்
இருப்பினும் நிறுத்தாதே
ஒரு தாய் விரும்புவது போலவே
நான் _ வளரும் _நாட்களைப் பார்க்க
நீ விரும்பினாய்
எப்படி நீ அழாமலிருத்தல் கூடும்
நீ அழுது கொள்
இன்று மட்டும், இன்று மட்டுமே
எனது பெட்டியை திறக்க முற்படாதே
நான் உனது குழந்தையேதான்
யுத்தத்தில்தான் சிதைந்தேன்
யுத்தம் உக்கிரமாகவே நிகழ்ந்தது
நேற்றைய களத்தில்
உன் பெண்குழந்தையைக் கண்டேன்
வீட்டில் வகிடெடுத்துப் பின்னிய
இரட்டைப் பின்னலை
முன்னும் பின்னும் விட்டபடி
குதித்தோடுபவளை,
காத்திருந்தாள்
தலைமயிரை
கத்தரித்திருந்தாள்.
என்னருகே வந்து
எப்போதும் போலவே அழைத்தாள்
இரத்தம் தோய்ந்த என்
இலககததை
மீண்டும் மீண்டும் பார்த்தாள்
அழமுற்பட்டாள் பின் அழவே
செய்தாள்.
தங்கையின் வரவை எதிர்பார்க்காதே
அவள் வரவே விரும்பினாள்
போர் விடவில்லை …..
விடவேயில்லை
அவள் வரவேண்டுமென
எனது தோழர்களை
வற்புறுத்தாதே அம்மா
-கவியாக்கம் :ஆகாசா
வெளியீடு :எரிமலை இதழ்
மீள் வெளியீடு :வேர்கள் இணையம்
முதல் இணைய தட்டச்சு :வேர்கள் இணையம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”