அவர்களை எழுதும்
ஒவ்வொரு தடவையும் .
நான் தோற்றே போகிறேன்
சொற்களைக் கோர்வையாக்க
சூத்திரம் போலொன்று வருகிறதேயன்றி
கவிதை வரக்காணோன்.
ரொபேட்புரூஸ்”போல
நானும் விடுவதாயுமில்லை .
“கரும்புலியின் நதிமூலம்”
எனக்கு புலப்படுவதாயுமில்லை .
எனினும்
இத்தனைவல்லமைகளுடன் சேர்ந்தே
எனக்கும் நாளாந்தமென்பதில்
எத்தனை செருக்கு.
என்தோல்வியே வெற்றியாகிறது
கண்ணாடி முன்நின்றாலும்
அவர்களின் கட்புலனுக்கே
அவர்கள் அகப்படாத போது
கவிஞன்காவியமெழுதுவது எப்படி ?
அகப்பட்டதை வைத்து
வம்சவரலாற்றுடன் சமரகவிபாடலாமே தவிர
ஊன்றின் தோற்றுவாயை தொடவே முடியாது
பாறை பிளந்துாறும் சுனைக்கசிவை
சுரக்கச் செய்வது எத்தனை பிரயத்தனம்?
வெடிப்பினுாடுவருகிறதே ஊற்று
எத்தனை ஆச்சரியம்.
இந்த ரிஷிமூலம் யாரறிவார்?
எட்டஇருப்பவர் மட்டுமல்ல
கிட்டவானவரும் அளவெடுக்கமுடியாதென்பதே
என்ஆதங்கம்.
எனக்குத் தெரியும் அவர்களை
அவர்களுடன்பேசியிருக்கிறேன்.
சிரித்து மகிழ்ந்திருக்கிறேன்.
சிரித்து மகிழ்வதென்பது சிலருக்கு ஆச்சரியமாக
இருக்கலாம்
அவர்கள் புன்கை மேகங்கள்.
சந்தோஷ நதிகள்.
சிறுவச்சிரிப்புமுகத்தினர்.
என்னென்றுதான்முடிகிறது இவர்களால்
இப்படி இருந்து போக
பிரமித்துப்போவேன்ஒவ்வொரு தடவையும்
ஒன்றாக உறங்கி
கரும்புலி இவள்.
கரும்புலிஇவன்
கரும்புலிகள்இவர்களென
தெரிந்துதான்விரியுமென் உறவு.
‘ஏன் மரணத்தின் பின்னும்
தொடரு வேன் உங்களுடனான தோழமையை
அவர்களை எழுதும
ஒவ்வொரு தடவையும்
நான் தோற்றே போகிறேன்
சொற்களைக் கோர்வையாக்க
சூத்திரம் போலொன்று வருகிறதேயன்றி
கவிதை வரக்காணோன்..
“ரொபேட்புரூஸ்” போல
–
கவியாக்கம்:புதுவை இரத்தினதுரை
வேர்கள் இணையத்தின் கரும்புலிகள் நாள் சிறப்பு வெளியீடு