இனப்படுகொலை குறித்தவரையறைகள் யாவும், அவைநடந்துமுடிந்தபின்னர் தீர்மானிக்கப்படுவதே வரலாறாகிவிட்டது. இரண்டு இலட்சம் மக்கள் கொன்று குவிக்கப்படும் போது அதனை இப் படுகொலை என்று கூறாமல் மெளனம் சாதித்தசர்வதேசம் இன்று சூடான் அதிபர் அல் பசீர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக தன்டனை வழங்குகிறது. 70000 மக்கள் கொல்லப் பட்டதாகப் பல வருடங்களாகக் கூறிவரும் சர்வதேசம் 2006 ஆம் ஆண்டடிலிருந்து இதுவரைசிங்களத்தால் அழிக்கப்பட்ட பத்தாயிரத்துற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் குறித்து பேச விரும்புவதில்லை. நாளொன்றிற்கு ஐந்து பத்து என்று ஆரம்பித்த கடத்தல்கள். படுகொலைகள் பாதுகாப்புவலயப் பகுதிகளில்நுாற்றுக் கணக்காக விரிவடைந்து விட்டது .சிலங்காவின் இறையாண்மைக்குள் இருக்கும் சிறைச் சாலைகளில் பாதுகாப்புத் தேடும் அளவிற்கு, தமிழ் மக்களின் மனித உரிமைள் சிங்களத்தால் நிமாயிக்கப்படுகின்றன. மக்களிற்கும், சிங்களத்தின் யாழ்ப்பாணக்ச்சிறைச்சாலைகளுக்குமிடையே இடைத்தரகராச் செயல் படும் மனித உரிமைகள் மையத்தின் பரிதாபநிலை குறித்து, ஐ.நாவின் மனித உரிமைச் சங்கத்தலைவர்கள் கவலைப் படுவதில்லை . மக்கள் கொல்வளப்படும் போதுமட்டும் கவலை தெரிவிப்பதே அவர்களின் கடமையாகிவிட்டது.

ஆனாலும் உலக வரலாற்றில், முன்னெப்பொழுதிலும் நிகழ்ந்திராத அதிசய நிகழ்வொன்று ஸ்ரீலங்காவில் அரங்கேறு வதைக் காணலாம் அதாவது ஒன்றோடொன்று முரண்பட்டு, முட்டிமோதும்சர்வதேச அணு ஆயுத வல்லரசர்களான சீனா ,இந்தியா,பாகிஸ்தான் மற்றும் மேற்குலக நாடுகள் , சிறிலங்கா விவகாரத்தில் ஒரு பாதையில் பயணிப்பதைத் தரிசிக்கலாம்.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினை அழிப்பதற்கு,தமக்கிடையே காணப்படும் உரசல்களை ஒரு புறம் ஒதுக்கிவைத்து,சிங்களத்திற்கு ஆயுத நிதி உதவிகளை தொடர் ந்தும் வழங்குவதை காணலாம்.

சீனாவைப் பொறுத்தவரை,இந்தியாவின் கழுத்தைச்சுற்றிப்போடப்பட்ட முடிச்சுகளில்,தவறவிடப்பட்ட ஸ்ரீலங்கா என்கிற மையத்தில் முடிச்சுப்போடும் காலத்திற்காக காத்திருந்து,2Oஒப்பந்தத்தோடு அதற்கான வேலையையும் ஆரம்பித்தது. அமைதிப்படை வெளியேற்றத்தோடு, பார்வையாளர் அந்தஸ்தினைப் பெற்ற இந்தியா, ஜே.வி.பியினுடாக புதியகாய் நகர்த்தல் ஒன்றினை மேற்கொண்டு, இடையில் நுழைந்த மேற்குலக சக்திகளை களத்திலிருந்து அகற்றியது.
தற்போது தமிழர்களுக்கு எதிரான சிங்களத்தின் போரினை, இந்தியா நிகழ்த்துவதேயதார்த்த நிலையாகும். சீனாவின் உள்நுழைவினை, இந்தியாவல் தடுத்து நிறுத்த முடியுமென்கிற எதிர்பார்ப்பில், நடை பெறும் கொடுரங்களை அமைதியாகஏற்றுக்கொள்கிறது இந்த மேற்குலகம்.இந்நிலையில் மனித உரிமை மீறல்களை முன்வைத்து.
சிறிலங்கா அரசினை மேற்குலகின் வல்லரசாளர்கள் அச்சுறுத்துவார்களென்று கனவு காணுதல் கூடாது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு பதிவுகளெல்லாம். கால்பதிப்பதற்கான துருப்புச் சீட்டுக்களாகவே இவர்களால் இதுவரை பயன்படுத்துவதை அவதானிக்கலாம் .
பிராந்தியங்களையும் அதன் சந்தைகளையும் கூறு போடுவதற்கே, உலக யுத்தங்களும், பிராந்தியப் போர்களும் முன்பு நிகழ்த்தப்பட்டன. பக்கத்து நாட்டில் எதிரிகள் பலமாக இருந்தால , பங்களாதேசத்தையும் உருவாக்குவார்கள், அதேபோன்று சிங்களம் சீனாவிடம் சரணடைந்தால் தமிழீழத்திற்கும் ஆதரவு வழங்குவார்கள். இதுதான் பூகோள அரசியலின் புதிய ஒழுங்குமுறைகள்.
சிறிலங்காவின் இப் பிரச்சனை குறித்து, சர்வதேச வல்லரசர்களின் தற்போதையநகர்வுகளை அவதானித்துப் பாருங்கள். புலம் பெயர் ஈழத் தமிழ் மக்களின் தொடர்ச்சியானகவனயீர்புப் போராட்டங்களின் எதிர்வினையாக சர்வதேசநாடுகளிலும் அதன் உயர் மூலஸ்தானங்களிலும் சில அசைவுகள் ஏற்படுவதுபோன்று தென்படுகின்றன.
அவையாவும் அழிக்கப்படும்தமிழினைதிற்கு சார்பான, நேர்மையான நகர்வுகளாவென்பதை ஆழமாக நோக்க வேண்டும் ஏற்கனவே ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இருதடவைகள்சிறிலங்காவிவகாரம் பேசப்பட்டபோதும் சீனாவும் ரஷ்யாவும்அதனை எதிர்த்தன.சிங்களத்தின் மீதான இந்த முன்னாள் ,இன்னாள் சோசலிச கோமான்களின் காதலை இவ்விவகாரம் வெளிப்படுத்தியிருந்தது .
மனித உரிமை வாதிகள் காட்டமான அறிக்கை வெளியிட்டு,சிங்களவர்களிடமிருந்து மோசமான பதில் அறிக்கை ஒன்றினையும் பெற்றுள்ளார்கள்.
ஆனால் ஒரு விடையத்தை மட்டும் எல்லோரும் மிகத் தெளிவாக உரத்துக் கூறுகின்றனர். அதுதான் ‘மனிதக் கேடய’விவகாரம் யுத்தத்தை நிறுத்த வலுவில்லாத, அல்லது விரும்பாத இந்த சர்வதேசம், மனிதம் கேடயத்தை தூக்கிப் பிடித்து,மனித உரிமை மீறல் என்கிற கூரிய வாளால், இப்படுகொலையினை நிகழ்த்துமாறு சிங்கள சிங்கத்திடம் கூறுவதுபோல் தெரிகிறது

பாலஸ்தினர் போன்று, கல்எறிந்து போராடும் நிலைக்கு. விடுதலைப் புலிகளை கொண்டு வந்து விட்டேன.நோர்வே அமைச்சர் எரிக் சொல்கேயும் கனவு காணத்தொடங்கியுள்ளார் .
இந்நிலையில் புலம்பெயர் தமிழர்களின் தன்னியல்பான எழுச்சிப் போராட்டங்கள் வெடித்தெழ ஆரம்பித்துள்ளது. இறுதிப்போரின் தளங்கள் விரிகின்றன, சர்வதேசத்தின் சதியைப் புரிந்து கொண்ட இளந்தலை முறையினர் .புதிய போராட்டக் களங்களுள் புகுந்து, அக்கினிக் குஞ்சுகளை வல்லரசாளர்களின் வாசல் வரை கொண்டுசெல்கின்றனர். தேசியத் தலைவனின் மாவீரர் தினை உரை விளம்பிய தீர்க்க தரிசனம், இளந்தலைமுறையூடாக நிதர்சனமாகிறது.
சிறப்புப்படையணிகளின்சிதைவுகள்வழங்கியசீற்றத்தால் இந்தியக்கூலிப்படைகளின் துணையுடன், அழிவாயுதங்களை பிரயோகிக்கத் தொடங்கிறது சிங்கள பேரினவாதம்.இதனை அங்கீகரிக்கும் மேற்குலகம் தமது காவல்துறையினை ஏவிவிட்டு, இளையோரின் போராட்டங்களை நசுக்க முற்படுகிறது.

வாழ்வுரிமைக்கான போராட்டம், உயிர் காத்தலிற்கான போராட்டமாக மாறிவிட்டது. இழப்பதற்கு உயிரைத் தவிர வேறேதுமில்லை . ஆனால் பெறுவதற்கோ எம் பரந்த தேசமுண்டு. உணர்வினைத் தக்க வைத்தால், போராட்டம் நகரும். இல்லையேல் போராடாமல் தன் வாழ்வைத் தொலைத்து விட்டது தமிழினமே சரித்திரம் கூறும்.
ஆக்கம் :இதயச்சந்திரன்
வெளியீடு : எரிமலை 2009
மீள் வெளியீடு :வேர்கள் 2018
இணைய தட்டச்சு © :வேர்கள் இணையம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”