கண்களில் அனல் வீச கரங்களில் ஆயுதம் பேச
நெஞ்சினில் உறுதி உரமேற
வீரம் கொழுந்துவிட்டெரிய
கால்கள் வெற்றிநடை போட
பகலென விடியல் நாட….
எழுந்திட்ட மறத்தமிழன்
விரைந்திட்ட செய்தி கேட்டு
கலங்கிட்டது சிங்கம்
துலங்கிட்டது தமிழ் வீரம்
வியந்திட்டது உலகம்
பறந்திட்டது புலிக்கொடி
தமிழ்மானம் திகழ்ந்ததது இங்கடா
மலரப் போவது தமிழிழம் அங்கு
மகிழுப்போவது தமிழ்மொழி
கவியாக்கம் :த. மதியழகன்
வெளியீடு :எரிமலை (1998)
மீள் வெளியீடு :வேர்கள் இணையம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”