இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home பொருண்மியம் அலுமினிய பாத்திரங்கள் பாவனைக்கு நல்லதல்ல.!

அலுமினிய பாத்திரங்கள் பாவனைக்கு நல்லதல்ல.!

எமது நாட்டில்  மண் சட்டிகளில் சமைப்பதை விடஅலுமினிய சட்டிகளில் சமைப்பது ஒரு நாகரீக வளர்ச்சியாக நம்பப்படுகிறது .அனால் இதில் ஏற்படக்கூடிய தீமைகள் என்ன? அலுமினியம் கூடிய வெப்பத்தில் நீரில் கரைகிறது அல்லது அமில அமில  பொருட்கள் தேசிக்காய் விட்ட கறிகள ,விறகிலிட்ட  சாப்பாட்டு பண்டங்கள் அல்லது அமிலத் தன்மை கொண்ட உணவுப்பொருட்கள் உதாரணமாக தக்காளிப்பழம் போன்றனவற்றில் கரையக்கூடிய தன்மை கொண்டது.

இதனால் ஏற்ப்படும் தீமைகள் என்ன ?

தற்போதைய ஆராய்ச்சிகளிலிருந்து அலுமியம்  எமது எலும்புகளை சத்தியிழக்க  செய்கிறது (week)இலகுவில் முறியக்கூடிய தன்மையைக்  கொடுக்கிறது என அறியவருகிறது

 

கூடுதலாக வயோதிய காலத்தில் கால் இடுப்பு மூட்டு தேய்ந்து அல்லது உடைந்துபோகச் செய்வது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இரத்தத்தில் உள்ள அலுமினியம்  காலப்போக்கில்  மூளையை சென்றடைந்து மறதியை கூட்டுகிறது அத்துடன் வயோதிய காலத்தில் மூலையில் அடைந்து (De – posit) deminsia என்னும் அறளை வரக்காரணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

[tabs]
[tab title=”குறிப்பு ” id=”[object Object]”]அலுமினியத்தை விட நச்சுத்தன்மையான உலோகம் பாதரசமாகும் (Mercury) இது உடல் வெப்பநிலை அளக்கும் வெப்பமானிகளில் பாவிக்கப்படுகின்றது. வெப்பமானி உடைந்தால் இதனைக் கையால் அகற்றாமல் கையுறை (Gloves) அணிந்து அல்லது வேறுவிதமாக அகற்றுதல் நல்லது. இது நகங்களின் இடைவெளியில் போனால் பின்னர் இரத்தத்துடன் கலக்க வாய்ப்புண்டு . முக்கியமாக இந்த திரவத்தை சிறு பிள்ளைகளை தொடவிடுதல் நல்லதல்ல . அகற்றிய திரவத்தை பாதுகாப்பாக எடுத்தல் நல்லது.[/tab]
[/tabs]

 

குறிப்பு: அலுமீனியப் பாத்திரங்கட்கும் உருக்குப்பாத்திரங்கட்கும் (stainless steel) உள்ள வித்தியாசம் அலுமீனியப்பாத்திரங்கள் இலகுவில் நெளியும் வளையும் தன்மை பொருந்தியவை. Stainless Steel பாத்திரங்கள் பாவனைககு நல்லவை.
குடிநீர் எப்போழுது நஞ்சாகிறது?
குடிநீர் என்பது மக்களின் பாவனையில் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. ஆனால் சுத்தமானதா, கலப்படமற்றதா, நஞ்சுத்தன்மை கொண்டதா என்பதனை எமது நாட்டுமக்கள் மட்டுமன்றி இங்கிலாந்து, ஜேர்மனி , கனடா. அமெரிக்கா போன்ற மேற்கத்தைய முன்னேறிய நாடுகளிலும் அறியாமலேயே உள்ளனர். குடிநீரில் நல்கி பெருகி வரக்கூடிய கிருமிகள், நுண் அங்கிகள் என்பன பற்றி பலரும் அறிந்ததே . ஆனால் இன்று மேற்கத்தைய நாடுகளில் மிகவும் பிரச்சனை தரக்கூடிய நஞ்சு குடிநீரில் கலந்துகொள்கிறது. இதனைக்கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் (WHO) நடாத்திய ஆராய்ச்சியில் புதிய சட்டமொன்றைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டுள்ளது வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் 10 மைக்கிரோ கிறாம் ஈயத்திற்கு (Lead) மேல் இருக்கக்கூடாது என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது உள்ளது. தற்போது பிரித்தானியச் சட்டப்படி 50மைக்கிரோ கிராமிற்கு மேல் ஈயம் குடிதண்ணீரில் இருக்கக்கூடாது.
முக்கியமாக இந்த ஈயத்தால் என்ன பிரச்சனை என பார்ப்போம். சமீபத்தில் (University of Edinbirgh)எடின்பரோ பல்கலைக்கழகத்தில் 500 சிறு பிள்ளைகள் மீது பரிசோதனை நடாத்தப்பட்டது . இதில் 250 பேர் குடிக்கும் குடிநீர் 50 மைக்கிரோகிராம் ஈயத்திற்கு இருந்ததால் மேலாக அவர்களுடைய இரத்தத்தில் ஈயத்தின் அளவு மேலதிகமாக காணப்பட்டது.
இதன் விளைவு என்ன?
இந்த சிறு பிள்ளைகளின் மூளை வளர்ச்சி ஏனைய சிறு பிள்ளைகளை மிக பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப் பிள்ளைகளின் பொது அறிவு கணித அறிவு, கணனி விளையாடும் திறமை (Computer Games) என்பன சாதாரண பிள்ளைகளை விட குறைவாகவோ அல்லது கனிசமான அளவு மெதுமையாகவோ (slow) இருப்பது ஆராய்ச்சிமூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த ஈயம் எப்படி குடிநீரில் கலக்கிறது? பெரும்பாலான பிரித்தானிய வீடுகளில் செப்புக்குளாய்கள் (Copper pipes) ஒட்டுவதற்காக பாவிக்கப்படும் ஈயம் (Plumber’s solvent) நீரில் கரையும தன்மை கொண்டது . அத்துடன் இன்னமும் சில இடங்களில் பாவிக்கப்படும் நீர் வினியோகக் குளாய்கள் ஈயக்குளாயங்களாகக் காணப்படுகின்றது :
பிரித்தானியாவில் 50 மைக்கிரோகிராமைத் தாண்டும் வீடுகள் 10% உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது . ஆனால் 10 மைக் கிரோகிராமை (WHO சட்டம்) தாண்டும் வீடுகள் 90% ஆக கணக்கிடப்பட்டுள்ளது . இதில் சிலபாகங்கள் மிக மோசமான அளவு ஈயத்தைக் கொணடிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக Black Bourn ல் சில வீடுகளின் நீர் வினியோத்தில் 750மைக்கிரோகிராம் ஈயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இவ்வீடுகட்கு நிவாரணம் வழங்கப்பட்டு வீட்டு நீர் வினியோகங்கள் அன்மையில் மாற்றம் செய்யப்பட்டன. WHO சட்டம் அமுலுக்கு கொண்டுவர ஒரு வீட்டிற்கு £400 படி பிரித்தானியாவில் £1.6பில்லியன் (£1.6 billion)செலவு ஏற்படக் கூடுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. காற்றிலுள்ள ஈயத்தை குறைப்பதற்காகவே வாகனங்களிற்கு ஈயமற்ற எரிபொருள் (Lead free petrol) கொண்டுவரப்பட்டது தெரிந்ததே.
ஏமது ஈழத்தில் இன்னமும் பல இடங்களில் ஈயக்குளாய்கள் தண்ணீர் வினியோகத்திற்கு பாவிக்கப்படுவது தெரிந்ததே. இக்குழாய்களை மாற்றீடு செய்தல் அல்லது பாவிக்காது விடுதல் நல்லது. குறிப்பாக சிறு பிள்ளைகள் குடிக்கும் நீரை ஈயக்குழாய்களின் ஊடாகப் பெறுவதைத் தவிர்ப்பது நல்லது. இவ் வேளையில்தான் எனது பாடசாலையில் தண்ணீர் வினியோகத்திற்காக ஈயக்குளாய்கள் பாவிக்கப்படுவதனை நினைவு கூர்கிறேன்
வெளியீடு  :தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம் (கார்த்திகை 1994)

மீள் வெளியீடு    :வேர்கள் இணையம் 

முதல் இணைய தட்டச்சு உரிமை :வேர்கள் இணையம்

“புலிகளின் தாகம் தமிழீழத்  தாயகம்”

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments